செய்முறை
செளசெளவைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு உப்புப் போட்டு வேக வைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.
காயை நன்றாக மசித்து, பருப்பு சேர்த்துக் கொதித்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு. இஞ்சி, பச்சை, மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும். இறக்கி வைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
தயிர் இருந்தால் 2 தேக்கரண்டி விடலாம்.
கொத்துமல்லி கறிவேப்பில்லை போடவும்.
தங்கம் ராமசாமி |