கீர்த்தனாவுக்குக் கல்யாணம் குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
|
 |
கார்த்திகைப் பேரழகி |
   |
- பழமைபேசி | ஜனவரி 2014 |![]() |
|
|
|
 |
 |
வீட்டு வாசற்படியின் கங்குகளெங்கும் கார்த்திகை விளக்குகள் சுடர்விட்டதைக் கண்ட எதிர்வீட்டு டெப்ரா என்ன சிறப்பென்றாள்!
எடுத்தியம்பியதும் எங்கள் வீட்டுக்கும் வைக்க வேண்டுமென்றதை மறுக்க இயலவில்லை!
கதவு தட்டப்படும் ஓசை கேட்டுப் போய் திறந்து பார்க்கையில் சுடர்விட்டு எரியும் எண்ணெய் விளக்குகளை வாழ்வில் தான் பார்த்ததே இல்லை என்றபின் உவப்புக் குமுறும் உள்ளப் பூரிகையோடு கேட்டாளே ஒரு கேள்வி அதற்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும்?
பெற்ற இன்பத்தை அன்பாய்க் கொடு மனிதம் போற்று!
பேரழகியானாள் செஞ்சாந்து நாணத்தில்! |
|
பழமைபேசி, காலியர்வில், டென்னசி |
|
 |
More
கீர்த்தனாவுக்குக் கல்யாணம் குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
|
 |
|
|
|
|
|