தெரியுமா?: தமிழ்பாடும் பெண் தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி தெரியுமா?: பாலபுரஸ்கார் படிக்கலாம் சிரிக்கக் கூடாது! தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
|
 |
தெரியுமா?: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி |
   |
- சின்னமணி | செப்டம்பர் 2013 |![]() |
|
|
|
 |
டாலஸ் மாநகரில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி, கோப்பல் தமிழ் மையம், வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, பாலதத்தா தமிழ்ப் பள்ளி எனப் பல்வேறு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. புறநகர்ப் பகுதியான ஃப்ரிஸ்கோவில், அதிகமாகப் புதிய தமிழ்க் குடும்பங்களின் குடிவரவு அதிகரித்து வருகின்றன. இங்குள்ள குழந்தைகளுக்கு, அருகிலேயே தமிழ்க் கல்வி கிட்டும் வகையில் அவ்வை தமிழ் மையம் என்ற புதிய தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. 10660 W Eldorado Pkwy, Frisco, TX 75035 என்ற முகவரியில் Childrens Lighthouse Learning Center வளாகத்தில், செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகின்றன. தமிழ் கற்கும் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழி கற்றலுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுதல் (accreditation for second language) என்ற தொலைநோக்குத் திட்டத்துடனும், அமெரிக்கச் சூழலுக்கேற்ற எளிய பொதுப்பாடத் திட்டத்தில் தமிழ்க் கல்வியை அளிக்கும் உடனடி திட்டத்துடனும் இது நடத்தப்படும் என்று பள்ளி நிறுவனரும், தாளாளருமான திரு.. சௌந்தர் ஜெயபால் கூறுகிறார். அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பாடத்திட்டத்துடன் தமிழ் மையம் செயல்படுகிறது.
மேலதிகத் தகவல்களுக்கு வலைமனை - www.avvaitamil.org மின்னஞ்சல் - info@avvaitamil.org |
|
சின்னமணி |
|
 |
More
தெரியுமா?: தமிழ்பாடும் பெண் தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி தெரியுமா?: பாலபுரஸ்கார் படிக்கலாம் சிரிக்கக் கூடாது! தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
|
 |
|
|
|
|
|