| கத்தரிக்காய் சாதம் கேழ்வரகு பிஸ்கட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பன்னீர் புர்ஜி 
 தேவையான பொருட்கள்
 எண்ணெய் – 1 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 1
 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 வெங்காயம் (நறுக்கியது) – 1/ 4 கிண்ணம்
 குடைமிளகாய் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
 தக்காளி (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
 பன்னீர் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
 மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
 கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் குடைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பன்னீர், மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கொத்துமல்லி, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| நித்யா நவீன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கத்தரிக்காய் சாதம்
 கேழ்வரகு பிஸ்கட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |