| கடலைப்பருப்பு பராத்தா பனீர் பராத்தா
 வெந்தயக்கீரை மேத்தி பராத்தா
 புதினா பராத்தா
 வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா
 வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  பரோட்டா வகைகள்: காலிஃபளவர் பராத்தா 
 தேவையான பொருட்கள்
 கோதுமை மாவு	-	2 கிண்ணம்
 காலிஃப்ளவர்	-	1 (நடுத்தர அளவு)
 கொத்துமல்லி
 விதைப் பொடி	-	1 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்	-	1 தேக்கரண்டி
 மிளகுப் பொடி	-	1/2 தேக்கரண்டி
 நெய்	-	4 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 கோதுமை மாவில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டு சப்பாத்தி மாவு போலப் பிசைந்து வைக்கவும். காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி, சிறிது உப்புப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், கொத்துமல்லிவிதைப் பொடி, மிளகுப் பொடி எல்லாம் போட்டு கெட்டிப் பூரணம் போல் செய்து கொள்ளவும். நன்றாகக் குழைவாய் இருக்க வேண்டும். சப்பாத்தி மாவைச் சிறு அப்பளம் போலச் செய்து கொண்டு அதன் மேலாகப் பூரணத்தை லேசாகப் பரப்பவும். இன்னொரு சப்பாத்தி செய்து அதன் மேல் மூடினாற் போல வைத்து அப்பளக் குழவியால் லேசாக இடவும். பூரணம் வெளியே வரக்கூடாது. தோசைக்கல்லில்  நெய் தடவி பராத்தாவைப் போட்டு சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் திருப்பி நன்கு வெந்தவுடன் எடுத்து வைக்கவும். இது சுவை மிக்க பராத்தா. தொட்டுக்கொள்ள குருமா மற்றும் சப்ஜிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடலைப்பருப்பு பராத்தா
 பனீர் பராத்தா
 வெந்தயக்கீரை மேத்தி பராத்தா
 புதினா பராத்தா
 வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா
 வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |