மாதுவாக வரும் நிரஞ்சன் ராவின் நகைச்சுவை டைமிங் வியக்க வைக்கிறது. சீனுவாக வந்து குஷ்மாதேவியாக ஸ்த்ரீ பார்ட்டிற்குத் தாவும் சதீஷ் சுப்ரமணியத்தின் நடிப்பும் அபாரம். ராமானுஜம் (வெங்கடேசன்), மைதிலி (ரேவதி மூர்த்தி), ஜானகி (விஜி முகுந்த்), மேனேஜர் (ஹரிஹரன் ராமசாமி), மைதிலியின் அண்ணன் (சக்கரவர்த்தி தேசிகன்) ஆகியோருக்கும் பாத்திரப் பொருத்தம் பிரமாதம். நாயர், டெட்பாடி மணவாளன், சென்னை தமிழ் பேசும் நபர் (ரங்கராஜன்), கோவிந்தசாமியாக சிகே போன்ற துணைப் பாத்திரங்களில் நடித்தவர்களும் சோடை போகவில்லை.
நாடகத்தின் பின்னணி இசை, காட்சி அமைப்புகள், ஒப்பனை, உடை அலங்காரம் எல்லாமே உயர்தரம். அவ்வப்போது ஒலிவாங்கி மட்டும் சுணங்கியது. கிரேசி மோகனின் 'மீசையானாலும் மனைவி' நினைவுக்கு வந்ததும் உண்மை.
சந்திரா சந்திரசேகரன் |