சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் சஞ்சிகைகளை வெளியிடும் பிரியா பதிப்பகம் (Priya Publications) நிறுவனத்தினர் அமெரிக்கா வின் பல பகுதிகளில் 'இந்தியா ப்ராபர்ட்டி ஷோ'க்களை இதற்காக மே மாதத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். உங்களுக்கு அருகிலும் ஒரு ஊரில் நடக்கக் கூடும். இதைப் பாருங்கள் தெரியும்:
ஊர் கண்காட்சி நடக்கும் இடம் தேதிகள் சான்டா கிளாரா (கலி.) Holiday Inn மே 10 - 11 பெல்லவூ டௌன்டவுன், சியாட்டில் Courtyard by Marriott மே 13 - 14 இர்விங், (டெக்ஸ்.) Dr Pepper Star Center மே 17 - 18 (Farmer’s Branch Conference Center)
இந்தக் காட்சிகளில் இந்தியாவின் பல இடங்களில் உள்ள வசிப்பிடங்கள் மட்டுமல்லாமல் வணிகரீதியான கட்டு மானப் பணித் திட்டங்களும் காணக் கிடைக்கும். பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், கொச்சி, மும்பை/நவி மும்பை, சூரத் ஆகிய இடங்களில் வீடு, நிலம், கடை, அலுவலகக் கட்டிடங்களில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் இந்தக் கண்காட்சியில் கிடைக்கும்.
முதலீட்டு நிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் என இருக்கும் விசேடப் பகுதியில் துரித வளர்ச்சியடையும் பகுதிகளில் பெருமுதலீட்டு வாய்ப்புகள் தனியாகக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து பல பிரபல வீட்டு, நில முகமைகள் பங்கேற்கின்றனர். |