செய்முறை
அரிசியை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். சீரகம், மிளகை ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை அத்துடன் சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பொருட் களுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். சாதம் உதிரி உதிரியாக வரும் பதத்திற்கேற்ப தண்ணீர் வைக்கவும். தயாரான சீரகச் சாதத்தில் கறிவேப்பிலை தூவி விடவும். வெஜிடபிள் குருமா, அப்பளத்துடன் சீரகச் சாதத்தைப் பரிமாறலாம்.
நளாயினி |