| 
											
											
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | ஏப்ரல் 2002: குறுக்கெழுத்துப்புதிர் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - வாஞ்சிநாதன் | ஏப்ரல் 2002 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
  ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
  குறுக்காக:
  2.  இச்சந்தைக்குப்போய் முழுதாக வாங்கி வர இயலாது (3) 5.  சிரத்தையில்லாமல் மேய பூமி வில் வைப்பிடம் (4) 6.  மலர்ந்ததும் மல்லிகையிலிருந்து மூக்கைத் துளைத்துக் கொண்டு வரும் (4) 7.  இந்நாள் பாபர் மசூதியில் பல்லாயிரமாண்டுகட்கு முன் சிறப்பானதென்று கூறுவர்(5) 9.  அடை பிடிக்காதவர்களுக்குக் கொடு (2) 10. உள்ளே ஏதுமணியாத உத்தமி தோலைக் காட்டுகிறாள்! (2) 12. சொந்த உழைப்பில் பெற்ற சுஜி சேர்ந்து மாற்றத் தயார் (5) 14. கைவசம் புளிப்பான நாட்டு மருந்துள்ளது (4) 15. போகாத வழியென்றாலும் வாழ்க்கை நடத்த வேண்டும் (4) 16. சோதிடனிடம் உதவி செய்ய இயலாதென்று சொல் (3)
  நெடுக்காக:
  1.  பழைய ஓவியங்கள் இருக்குமிடம் அறிய எல்லோராலும் முடியாது (4) 2.  பகலவனால் விரட்டப்படுவது (2) 3.  டில்லியில் பைசா நினைவூட்டும் (6) 4.  ஒரு பூ சாற்றத் தொடங்க குரங்கு (4) 8.  ஆவிபோல் காற்றில் வந்து உயிரையெடுக்கும் (6) 11. போக இருப்பது (4) 13. சங்கத்துக் கதாநாயகா! இறுதியாக மழை விருந்துணவைச் சுமக்கும் (4) 15. கட்டு நிறைய பணம் சம்பாதிப்பவர் தரவேண்டியது! (2)
  வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com | 
											
											
												| 
 | 
											
											
											
												குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
 
  குறுக்காக:2. பங்கு 5. புல்நுனி 6. தும்மல் 7. ராமநவமி 9. திணி 10. உமி 12. சுயார்ஜித 14. வசம்பு 15. வருவாய் 16. கைவிரி 
  நெடுக்காக:1. எல்லோரா 2. பனி 3. குதுப்மினார் 4. சாமந்தி 8. நச்சுப்புகை 11. மிச்சம் 13. தலைவாழை 15. வரி | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |