செய்முறை
அடி கனமான வாணலியில் கோவாவையும் சர்க்கரையையும் நன்றாகக் கலக்கவும். மிதமான சூட்டில், தொடர்ந்து கிளறி, இந்தக் கலவை இறுகும் வரை வைக்கவும் மெத்து மெத்தென்று பக்குவம் வரவேண்டும். பின்னர் 15-20 நிமிடங்கள் ஆறவிடவும். ஏலக்காய் பொடி, கலர் பொடி தூவி நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து வட்ட வடிவில் தட்டவும் (பட்டர் பிஸ்கட் போன்று) இதன் நடுவில் 2-3 பிஸ்தா பருப்பை அழுத்தி வைக்கவும். மீதமுள்ள கலவையை இவ்வாறே செய்து கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |