கலி·போர்னியா தமிழ் கழகம் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவை ஜூன் 7ம் தேதி மாலை 3 மணிக்கு, ஸான் ஹோசேயில் உள்ள சி. இ. டி. நிகழ்கலையரங்கில் (CET Performing Arts Center) நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. ஆண்டு தோறும் மாணவர்களை மேடையிலேற்றிப் பெருமையடையும் இக்கழகம், இம்முறையும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மணிகளின் தமிழ் இயல், இசை, நாடகத் திறமையை வெளியிட ஆயத்தமாய் இருக்கிறது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சி பாரதி நாடக மன்றம் அளிக்கும் ‘அக்கினிக் குஞ்சு’ நாடகம். மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் திரு. மணி மு. மணிவண்ணன் எழுதி இயக்கும் இந்த நாடகம் குழந்தைகள் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை 4:15 மணிக்குத் தொடங்கும். |