| கத்திரிக்காய் ஸ்பெஷல் கத்தரிக்காய் தேங்காய் பால் கிரேவி
 கத்தரிக்காய் சாலட்
 கத்தரிக்காய் துவையல்
 கத்தரிக்காய் எண்ணைய் கறி
 கத்தரிக்காய் பருப்பு அடைத்த கறி
 கத்தரிக்காய் ரசவாங்கி
 கத்தரிக்காய் பஜ்ஜி
 கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters)
 கத்தரிக்காய் கறி (ஒவனில்)
 கத்தரிக்காய் காஸரோல் (Casserole)
 கத்தரிக்காய் பாஸ்தா
 கத்தரிக்காய் மசாலா கிரேவி
 மாதுளம்பழம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மாதுளம் பழம் ஐஸ் க்ரீம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூன் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| தேவையான பொருள்கள் 
 மாதுளம் பழம்	-	6
 சர்க்கரை		-	7 தேக்கரண்டி
 எலுமிச்சைச் சாறு	-	1/4 கிண்ணம்
 தண்ணீர்		-	1/4 கிண்ணம்
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 மாதுளம் பழத்தைக் குறுக்குவெட்டில் பாதியாக வெட்டி, உள்ளிருக்கும் விதை களிலிருந்து ஜூஸ் எடுத்து, அதை முற்றிலு மாக வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அலுமினியமில்லாத ஒரு நடுத்தரமான பாத்திரத்தில் 1/4 கிண்ணம் தண்ணீர் விட்டு அதில் 7 கரண்டி சர்க்கரையைப் போட்டு அடுப்பிலேற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். சர்க்கரை தண்ணீரில் முழுமை யாகக் கரையும் வரை கொதிக்க விட்டால் போதும். அதற்குப் பிறகு அடுப்பிலிருந்து பாத்திரத்தை நீக்கி, இந்தக் கலவையை முற்றிலுமாகக் குளிர வையுங்கள்.
 
 வடிகட்டி வைத்திருக்கும் மாதுளம்பழச் சாறையும், தயாராக வைத்திருக்கும் எலுமிச்சைச் சாறையும், இந்தக் குளிர்ந்த சர்க்கரைக் கலவையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை, ஐஸ்க்ரீம் மேக்கரில் (ice cream maker) ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியின் ·ப்ரீசருக்குள் (freezer) வைத்துவிடுங்கள். இந்தக் கலவையை இரண்டு நாட்கள் வரை ·ப்ரீசருக்குள் வைத்திருக்க வேண்டும்.
 
 பிறகு, கண்ணாடிக் கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறலாம். சத்தான, குளிர்ச்சியான, குழந்தைகள் விரும்பும் சுவையோடு மாதுளம் பழம் ஐஸ்க்ரீம் தயார்.
 
 *****
 
 கிச்சன் டிட்பிட்ஸ்
 
 பால் திரிந்து போய்விடும் போல தோன்றினால் சிறிது சோடா உப்பு போட்டு காய்ச்சவும். அப்போது பால் திரியாமல் இருக்கும்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கத்திரிக்காய் ஸ்பெஷல்
 கத்தரிக்காய் தேங்காய் பால் கிரேவி
 கத்தரிக்காய் சாலட்
 கத்தரிக்காய் துவையல்
 கத்தரிக்காய் எண்ணைய் கறி
 கத்தரிக்காய் பருப்பு அடைத்த கறி
 கத்தரிக்காய் ரசவாங்கி
 கத்தரிக்காய் பஜ்ஜி
 கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters)
 கத்தரிக்காய் கறி (ஒவனில்)
 கத்தரிக்காய் காஸரோல் (Casserole)
 கத்தரிக்காய் பாஸ்தா
 கத்தரிக்காய் மசாலா கிரேவி
 மாதுளம்பழம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |