செய்முறை
ஒரு ஒட்டாத (நான்ஸ்டிக்) பாத்திரத்தில் நெய்யில் இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை இவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். அதில் பச்சைமிளகாய் போட்டுச் சற்று வதக்கி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். ஒரு நிமிடம் நன்றாகக் கொதித்த பின்னர் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும். அவ்வப்போது லேசாகக் கீழ் மேலாகக் கிளறவும்.
பாத்திரத்தில் ஈரம் வற்றி அரிசி நன்றாக வெந்த பின்னர் பொரித்த பன்னீர்த் துண்டங்களைப் போட்டுக் கிளறி, இறக்கி மூடி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |