கலைஞர்கள் சங்கரநாராயணண், அருணா சாயிராம், சுதா ரகுநாதன், ரமணி, மைசூர் மஞ்சுநாத், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், T.M. கிருஷ்ணா மற்றும் ஹரிபிரசாத் செளராசியா ஆகியோர் வந்து அனை வரையும் இசை வெள்ளத்தில் திக்கு முக்காடச் செய்தனர். உள்ளூர்க் கலைஞர் கள், இசையாசிரியர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் இவர்களையும் அரவணைத் துப் பங்கேற்கச் செய்தது மிகச் சிறப்பு.
தங்கள் வீட்டில் நான்கு நாட்கள் பலரும் சமையல் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், காலை உணவு முதல் இரவு உணவுவரை அனைத்தும் சுவையான, தரமான, சிக்கனமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் எங்கு இருக்கிறாம் என்ற உணர்வே இல்லாமல் இசையுடனும் நம் கலாசாரத்துடனும் ஒன்றியிருந்த பலரை இத்தகைய விழா மீண்டும் மீண்டும் வாராதா என ஏங்கச் செய்தது நிதர்சனமான உண்மை.
பத்மப்ரியன் |