Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சங்கர நேத்ராலயா: புட்டபர்த்தி MESU பிரிவின் பார்வை வழங்கும் சாதனை
- இருங்கோவேள்|ஜூலை 2026|
Share:
சென்னை சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் S.S. பத்ரிநாத் அவர்களின் 'நடமாடும் கண் மருத்துவ அறுவை சிகிச்சை' (Mobile Eye Surgical Unit - MESU) திட்டத்தின் புட்டபர்த்தி பிரிவு 2026 ஜூன் மாதத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஏப்ரல் 2025-ல் ஆரம்பிக்கப்பட்ட புட்டபர்த்தி MESU பிரிவு, 20 கண் அறுவை சிகிச்சை முகாம்களில் 14,652 பயனாளிகளுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்து, 1851 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைகளைச் செய்து, கண்களுக்குள் லென்ஸ்களைப் பொருத்திச் சாதனை படைத்துள்ளது.

திருமல் ரெட்டியின் பெற்றோர்களான முனுகுண்ட்லா வெங்கட் ரெட்டி மற்றும் முனுகுண்ட்லா வித்யாவதி ஆகியோர் தமது 'MVR அறக்கட்டளை' மூலம் உள்ளூர் அமைப்பாளராகச் செயல்பட்டு வருகின்றனர். கண் அறுவை சிகிச்சை முகாம் வெற்றிபெறுவதில் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.



புட்டபர்த்தி MESU பிரிவு, 2026 ஜூன் 1 முதல் ஜூன் 10வரை மட்டும் தெலுங்கானா மாநிலத்தில், நலகொண்டா மாவட்டத்தில், தேவரகொண்டா பகுதியில் கொண்ட பீமனபள்ளி கிராமத்தில் பத்து நாட்கள் முகாம்களை நடத்தியது. இதில் 2417 மலைவாழ் மக்களின் கண்களைப் பரிசோதித்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 162 மலைவாழ் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை சேவைகளை வழங்கியுள்ளது. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் பயனாளிகள் 179 பேரை, அருகிலுள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையோடு இணைந்து செயல்படும் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.

2026 ஜூன் மாத நிலவரப்படி இந்தப் பிரிவு, 10 நாட்கள் சேவை செய்யும் 155 முகாம்களை சிறப்பாக நடத்தி, 136,105 மலைவாழ் மக்கள், மற்றும் கிராமப்புற மக்களுக்கு தனது முழுமையான கண் பரிசோதனைகளை வழங்கி, 21,472 பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக கண்ணுக்குள் பொறுத்தும் செயற்கை லென்ஸ்களுடன் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்கியுள்ளது.

சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியிலேயே சமீபத்திய தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நடமாடும் அறுவை சிகிச்சைப் பிரிவின் பேருந்திலேயே அறுவை சிகிச்சையும் செய்து பார்வையை மீட்டுக் கொடுத்து, அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இவர் 1982 ஆம் வருடம் சங்கர நேத்ராலயாவில் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளராகப் பணியில் சேர்ந்து, ஆபரேஷன் தியேட்டர் சேவைகளை வடிவமைக்கும் அளவுக்கு உயர்ந்தார். 1982 முதல் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி இறுதி வகுப்பு மட்டுமே படித்த பல இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்களை உருவாக்கினார். டாக்டர் பத்ரிநாத் அவர்களின் வழிகாட்டலில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்களுக்காக ஒரு கையேடும் எழுதி வழங்கினார்.



ஆன்மீகத்தோடு சமூகப்பணியிலும் மிகப்பெரும் சேவை ஆற்றிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா புட்டபர்த்தி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவினை 1994ஆம் வருடம் நவம்பர் 24ஆம் நாள் ஆரம்பித்தபோது, அந்த ஆபரேஷன் தியேட்டரை, சங்கர நேத்ராலயாவின் ஆபரேஷன் தியேட்டரைப் போலவே வடிவமைத்து, முதல் கண் ஆபரேஷன் நடைபெற்றபோது உடனிருந்து நடத்திக் கொடுத்தவர் திரு. கிருஷ்ணமூர்த்தி.

அமெரிக்க இந்தியர்களின் அன்புக் கொடை
தம் தாய்நாட்டை மறவாது, தான் பிறந்த கிராமத்தில் பார்வை வழங்கும் யாகமாக கிராமத்தை தத்தெடுக்கும் திட்டம் மூலம், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் வழங்கும் தன்னலமற்ற கொடையினால் இது சாத்தியமாகிறது.

உங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பார்வை கொடுக்கத் தயாரா?
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்:

தகவல்களுக்கு அல்லது நன்கொடை அளிக்க:
இணையதளம்: www.sankaranethralayausa.org
கட்டணமில்லாத் தொலைபேசி: (855) 463-8472

வரி விலக்குப் பெறத்தக்க நன்கொடைகளை (வரிவிலக்கு அடையாள எண்: 52-1611548) பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்:
Sankara Nethralaya USA, 7238 Muncaster Mill Rd, No. 522, Derwood, MD 20855

SN USA YouTube சேனல்: www.youtube.com
மின்னஞ்சல் முகவரி: president@snomtrust.org

தகவல்: முனைவர் அ.போ. இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை
Share: 




© Copyright 2020 Tamilonline