|
| ஜூலை 2026: வாசகர் கடிதம் |
   |
- | ஜூலை 2026 |![]() |
|
|
|
|
ஜூன் தென்றல் இதழில் சிறப்புப் பார்வை பகுதியில் பத்மஸ்ரீ அங்கே கௌடா அவர்களின் 'அங்கே கௌடா புஸ்தக மனே' பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். சிறுவயது முதலே புத்தகங்கள் படித்ததுடன், கிடைத்த குறைந்த வருவாயில், புத்தகங்கள் வாங்கிச் சேமித்து, தன் வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளது அறிந்து வியந்தேன்.
மனோகர் எழுதியுள்ள 'கனவும் நிஜமும்' அருமையான சிந்தனை கொண்ட கதை. 'அமானுஷ்யம்' முடிவு ஒரு விதத்தில் நமக்குத் தெரிந்தாலும், வெங்கடேஷ் அற்புதமாக எழுதியுள்ளார்.
அலமாரிப் பகுதியில் கானசரஸ்வதி டி.கே. பட்டம்மாளின் கட்டுரை அற்புதம். அந்நாட்களில் உபயோகித்த வார்த்தைகள் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தன. 'முன்னோடி' பகுதியில் செவாலியே விருதுபெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ச. மதனகல்யாணி அவர்களைப் பற்றிய கட்டுரை சிறப்பு.
என் சிறுவயதில் அண்ணா, அக்காக்கள் யாவரும் கல்கி விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் தொடர்களைச் சேகரித்து பைண்டு செய்து வைப்பார்கள். பிற்காலத்தில் அவற்றைப் படித்து மகிழ்ந்தோம். அப்படித்தான் துமிலன் படைப்புக்களை நிறையப் படித்துள்ளோம். அவரைப்பற்றி மறுபடியும் தென்றலில் படித்தவுடன் பழைய ஞாபகங்கள் வந்தன. |
|
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|
|
|