Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சின்னக்கதை
கையில் அணிந்த வளையல்கள்
- |மே 2026|
Share:
சைதன்யரின் சமகாலத்தவரான உத்தாலகர், பகவானை கண்ணுக்குத் தெரியும் இயற்கையாக வழிபடுவதை விரும்பினார். படைத்தவரை அவரது படைப்பில் வணங்கினார். பாத்திரத்தில் இருந்ததை விடுத்துப் பாத்திரத்தையே வணங்கினார். சுருக்கமாகச் சொன்னால், ராதையை (அதைத் திருப்பிப் போட்டால் தாரை ஆகும்), கிருஷ்ணரிடமிருந்து பிரிக்க முடியாத பிரகிருதியான பெண் அம்சத்தை, வணங்கினார்.

அவருடைய தாபம் நெகிழ்ச்சியூட்டுவதாக, தவம் வலுவானதாக இருந்து. ஒருநாள், கிராமத்தின் அருகே சரஸ்வதி ஆற்றின் கரையில் வளையல் வியாபாரி ஒருவர் நடந்து சென்றபோது, படித்துறையில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண் ஒருத்தியைக் கண்டான். உங்கள் தாபத்தைத் தணிக்க எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்களோ, அதே அளவு பிரபு உங்கள் வேதனையைத் தணிக்க ஆர்வமாக இருக்கிறார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் அதை உணர்கிறேன்.

அவள் அவனை அருகில் அழைத்து பல ஜோடி வளையல்களைத் தேர்ந்தெடுத்து அனைத்தையும் அணிந்து கொண்டாள். கடைசியாக, அவர் பணம் கேட்டபோது, அவள் “ஓ! உமக்குப் பணம் தரவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன்! தயவுசெய்து கிராமத்தில் உள்ள உத்தாலகரின் வீட்டிற்குச் செல்லுங்கள்; யாரைக் கேட்டாலும் வீட்டைக் காட்டுவார்கள். அவரிடம் போய்ப் பணம் கேளுங்கள். அவரது மகள் வளையல் வாங்கியதாகச் சொல்லுங்கள். அவர் நிச்சயமாகப் பணம் தருவார். பூஜை அறையில் ராதையின் படத்திற்குப் பின்னால் பணம் இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் சொல்லலாம்" என்றாள்.

அவளுடைய வார்த்தையை நம்பி வளையல்காரன் கிராமத்தில் உள்ள அவளுடைய பெற்றோரின் வீட்டிற்கு விரைந்தான். உத்தாலகர் அந்தக் கதையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார், ஏனெனில், அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அவர் திருமணம்கூடச் செய்து கொள்ளவில்லை. ஆனால் வளையல் விற்பவர், அந்தப் பெண் ஏமாற்றுகிறவள் அல்ல, ராதையின் படத்துக்குப் பின்னால் பாருங்கள் என்று சொல்லி வற்புறுத்தினார். உத்தாலகர் அங்கு நான் பணம் வைக்கவில்லை என்றார். எல்லா இடத்தையும் விட்டுவிட்டு அங்கே நான் எப்படிப் பணத்தை வைப்பேன் என்றார். ஆனால் வளையல் விற்பவரைத் திருப்திப்படுத்துவதற்காக, அவர் அங்கு போய்ப் பார்த்தார்,

வளையல்களுக்குத் தேவையான பணத்தைக் கொண்ட முடிச்சு ஒன்று அங்கே இருந்தது. ஒரு நொடியில், அந்த மனிதனை அனுப்பியது ராதாவாகவே இருக்க வேண்டும் என்று உணர்ந்து, வியாபாரியின் பாதங்களில் விழுந்தார். மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நதியின் படித்துறைக்கு ஓடினார். ஒரு கணம் அவர் தண்ணீருக்கு மேலே ராதாவின் வலது கை வெளியே வருவதையும், அதில் வளையல்கள் காலைச் சூரியனில் பளிச்சிடுவதையும் பார்த்தார். தன்னை ஆசீர்வதிக்கவே அந்தக் கை உயர்ந்தது என்று புரிந்துகொண்டார். அது தன்னை அழைப்பதாக உணர்ந்த அவர், உடலை நீத்து அவளது மடிக்குள் பறந்து விட்டார்.
நன்றி: சனாதன சாரதி, பிப்ரவரி 2026
Share: 




© Copyright 2020 Tamilonline