|
| மாறியது தர்மம் |
   |
- | டிசம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த பொருள்கொண்ட பொருத்தமான சொற்களில் பதிலளித்தார். மன்னர் மிக மகிழ்ந்து, துறவிக்குக் காணிக்கையாக ஒரு தட்டு நிறைய தங்கக் காசுகளைக் கொண்டு வருமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார். சந்நியாசி அந்தப் பரிசை ஏற்கவில்லை. தான் ஒரு சர்வசங்க-பரித்யாகி (பற்றுக்கள் அனைத்தையும் துறந்தவர்) என்ற முறையில் அதைப் பார்க்கக்கூட முடியவில்லை என்று சொல்லி, சட்டென்று வெளியேறினார்.
அடுத்த நாள், அதே நடிகர் ஒரு பாரம்பரியமான, தேர்ந்த நர்த்தகியாக அரண்மனைக்கு வந்தார். மன்னன் அதை மிகவும் பாராட்டினான், அமைச்சர் தங்க நாணயங்கள் நிறைந்த தட்டைக் கொண்டு வந்தார். தான் காண்பித்த திறமைக்கு அந்த வெகுமதி மிகச் சிறியது என்று கூறி நர்த்தகி அதை ஏற்க மறுத்தாள். முந்தின நாளின் சந்நியாசிதான் இன்று நர்த்தகியாகத் தன்முன் நிற்கிறாள் என்று குரலிலிருந்து மன்னர் ஊகித்தார். அவரது ஊகம் சரிதான். “முந்தின நாள் அதே பரிசை வாங்க மறுத்துவிட்ட நீர், இன்று ஏன் அதிகமாகக் கேட்கிறீர்?” என்று அரசர் கேட்டார். அதற்கு அந்த நடிகர், "நேற்று நான் சன்னியாசியாக இருந்ததால், மறுப்பது என் தர்மம். இன்று நான் ஒரு நர்த்தகி, எனது ரசிகர்களிடமிருந்து முடிந்தவரை வெகுமதி பெறுவது எனது தர்மம்” என்றார்.
நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2025 |
|
|
| பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|
|
|
|