Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
3rd i வருடாந்திர தெற்காசியத் திரைப்பட விழா
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2025|
Share:
'3rd i' (www.thirdi.org) நடத்தும் 23வது வருடாந்திர சான் ஃபிரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசிய திரைப்பட விழா. தி ரோக்ஸி தியேட்டர், சான் பிரான்சிஸ்கோவில் அக்டோபர் 10 முதல் 12 வரை இந்த விழா நடைபெறும்.

இந்தத் தெற்காசிய திரைப்பட விழா பாலிவுட்டுக்கு அப்பால் இந்தியா, இலங்கை, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் விருதுபெற்ற திரைப்படங்களை வழங்குகிறது. Black Comedy வகை தொடங்கி, எதிர்ப்பு உணர்வு முதலியவற்றைச் சித்திரிக்கும் புலம்பெயர்ந்தோரைச் சேர்ந்த அற்புதமான சினிமாவை இந்த விழா வழங்கும்.

டிக்கெட்டுகளை வாங்கும்போது 'cp2025' எனக் குறியிட்டு, ஒரு தனிப்பட்ட $12 டிக்கெட்டுக்கு 25% தள்ளுபடியைப் பெறுங்கள். (இது திரையிடலுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைன் விற்பனை முடிவடையும் வரை மட்டுமே. ஆன்லைன் கட்டணத்தில் தள்ளுபடி இல்லை).

நாள்: அக்டோபர் 10, வெள்ளிக்கிழமை, இரவு 7:30 மணி
இடம்: தி ராக்ஸி தியேட்டர், SF
படம்: Little Jaffna
இயக்குனர்: லாரன்ஸ் வாலின்
(பிரான்ஸ், 2024,100 நிமிடங்கள், பிரஞ்சு மற்றும் தமிழ், ஆங்கில சப்டைட்டிலுடன்)
இயக்குனர் லாரன்ஸ் வாலினுடன் கலந்துரையாடல்.

இது லாரன்ஸ் வாலினின் வசீகரமான க்ரைம் த்ரில்லர். நுணுக்கமான சமூக அரசியல் அடித்தளத்தில், வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சூரிச் திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேசப் படத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. பாரிஸின் கலகலப்பான லா சேப்பல் மாவட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில் உள்ளூர்த் தமிழ்க் கும்பலில் ஊடுருவ நியமிக்கப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ரகசிய ஃபிரெஞ்சு போலீஸ் அதிகாரியைச் சித்திரிக்கிறார். அவர் தனது இரட்டை அடையாளத்தின் காரணமாகக் கலாசாரச் சிக்கல்களை எதிர்கொள்கிறார். புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்களையும் வாலின் சித்திரிக்கிறார், அவர்கள் தங்கள் வேர்களைப் பாதுகாக்கவும் ஃபிரெஞ்சு சமூகத்தில் ஒருங்கிணையவும் முயல்கின்றனர்.



நாள்: அக்டோபர் 12, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3:45
இடம்: தி ராக்ஸி தியேட்டர், SF
படம்: Your Touch Makes Others Invisible
இயக்குனர்: ராஜீ சமரசிங்க
(இலங்கை/அமெரிக்கா, 2025, 70 நிமிடங்கள், ரஷ்யன், சிங்களம், தமிழ். ஆங்கில சப்டைட்டில்களுடன்)
இயக்குனர் ராஜி சமரசிங்கவுடன் உரையாடல்.

வட இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ப் பெண் தனது மகனை அமானுஷ்யமான முறையில் இழக்கிறாள். அவரது கதையுடன் பின்னிப் பிணைந்திருப்பது, ராணுவத்தினர் கைகளில் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் வீட்டுப் பெண்களின் சாட்சியங்கள். உருவகம், மாயாஜால யதார்த்தம், புலனாய்வு ஆகிய அம்சங்களை இணைத்து வழங்கும் இந்த சமரசிங்கவின் படம், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போன ஆயிரக் கணக்கானோரை ஆராய்வதாகும்.
செய்திக் குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline