Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சின்னக்கதை
ருக்மிணி கல்யாணம்
- |அக்டோபர் 2025|
Share:
ருக்மிணி கல்யாணம் வெறும் ஒரு திருமணத்தின் கதை அல்ல. இது புருஷன் (ஆண் தத்துவம்) பிரகிருதியுடன் (ஜடமான இயற்கை) இணைவதாகும். புரோகிதர் என்பது வேதத்தின் அங்கீகாரம், இதன் மூலம் இவ்விரண்டின் இணைப்பு அறியப்படுகிறது. ருக்மிணி ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா. அவள் பிரகிருதி விதித்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளால் துன்புறுகிறாள், அகங்காரம் (உடலுடன் தன்னை அடையாளம் காண்பதால் பெறப்படும் தவறான மமதை) அவளுடைய சகோதரன், உலகப்பற்று அவளுடைய தந்தை.

ஆனால் அவளுடைய சதாசாரம் (நன்னடத்தை) காரணமாக, அவளுடைய மனம் கடவுளின் மீதே நிலைத்திருந்தது. அதனால் கடவுளை அடைவதற்கு ஒரு வழியை அவளால் திட்டமிட முடிந்தது. அவளுடைய பிரார்த்தனை, தவறுக்கு வருந்துதல், ஏக்கம் மற்றும் மன உறுதிக்குச் சரியான வெகுமதி கிடைத்தது. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க விதிகளை அவளும் கடைப்பிடித்தது இறுதியில் அவளைக் காப்பாற்றியது.

எப்படி என்றால், திருமணச் சடங்கிற்கு முன்பு கிரிஜா பூஜைக்காக அவள் வெளியே சென்றாள். ஆலயத்தில் அவள் வழிபாட்டில் மூழ்கியிருந்தாள், அதனால் அங்கே காத்திருந்த இறைவனால் பந்தங்களிலிருந்து அவள் விடுவிக்கப்பட்டாள்! பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர் அனைவரும் ஆட்சேபித்தனர், ஆனால் ஒரு ஜீவன் தனது விதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பிறந்திருக்கிறதே அன்றி, பிறர் திட்டத்தின்படி, அவர்கள் எவ்வளவு அன்பானவர்களாக அல்லது நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, வாழ்நாளைக் கழிப்பதற்காக அல்ல.

நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2025
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline