புனித யாத்திரை திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களான சோம்நாத், மல்லிகார்ஜுனர், மகாகாலேஸ்வர், ஓம்காரேஷ்வர், வைத்யநாத், பீமாசங்கர், ராமேஷ்வர், நாகேஷ்வர், காசி விஸ்வநாதர், த்ரம்யபகேஷ்வர், கேதார்நாத், கிரிஷ்னேஸ்வர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசித்தார்.
அவற்றோடு அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
கோயில் திருப்பணிகள் வாரியார் செய்த கோயில் திருப்பணிகள் சில
காங்கேய நல்லூர் முருகன் கோயில் திருப்பணி சென்னைக் குயப்பேட்டை ராஜகோபுரத் திருப்பணி, திருக்குளத் திருப்பணி மோகனூர் அருணகிரிநாதர் அறச்சாலைத் திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருமதில் திருப்பணி வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் திருப்பணி சமயபுரம் திருப்பணி கோவை தடாகம் ரோடு பாலதண்டாயுதபாணி கோயில் திருப்பணி கோவை வெங்கடேசுவரர் கோயில் திருப்பணி கோவை சேஷாத்திரி சுவாமிகள் அதிஷ்டானத் திருப்பணி கோவை ஐயப்ப சுவாமி திருப்பணி கோவை காமகோடி வித்யாமந்திர் திருப்பணி திருவானைக்கா திருப்பணி மதுரை ஐயப்ப சுவாமி திருப்பணி மதுரைக் கூடலழகர் திருப்பணி திருமோகூர் காளமேக சுவாமி திருப்பணி சென்னை தேனாம்பேட்டை முருகன் கோயில் திருப்பணி வள்ளிமலைத் திருப்பணி (ராஜகோபுரம்) சென்னை மாதவப் பெருமாள் கோயில் திருப்பணி வள்ளிமலை சரவணப் பொய்கைத் திருப்பணி ஸ்ரீரங்கம் திருப்பணி திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் திருப்பணி நெல்லிக்குப்பம் வீரபத்திர சுப்ரமண்ய சுவாமி கோயில் திருப்பணி வயலூர் திருப்பணி (இரண்டுமுறை) கும்பகோணம் கொட்டையூர் கோடீசுவரநாதர் கோயில் திருப்பணி காங்கேயநல்லூர் பெருமாள் கோயில் ராஜகோபுரத் திருப்பணி சென்னை சைதை குளத் திருப்பணி
வாரியார் அமைத்த சபைகள்
திருப்புகழ் சபை - காங்கேய நல்லூரில் வாரியாரின் தந்தையார் மல்லையதாசர் தோற்றுவித்தது 'திருப்புகழ் சபை'. இதன் வளர்ச்சிக்கு வாரியார் பெருமளவில் உதவினார். இச்சபை இன்றும் செயல்பட்டு வருகிறது.
திருவருள் தவநெறி மன்றம் - நெல்லையில் 1940ல் வாரியார் திருப்புகழ் சபையைத் தொடங்கி வைத்தார். தாம் சார்ந்த மதத்தின்பால் அதிகப் பற்றுக் கொண்ட வாரியார் அதனைப் பரப்பிட விரும்பி, ஏழு சொற்பொழிவாளர்களை நியமனம் செய்து நிரந்தரத் தலைவராக அப்போதைய மதுரை திருஞானசம்பந்த மடத்து ஆதீனம் அவர்களை வீற்றிருக்கச் செய்து, 'திருவருள் தவநெறி மன்றம்' என்ற அமைப்பை 1954ல் தொடங்கினார். வாரியார் எங்கிருந்தாலும் மாதந்தோறும் 500 ரூபாய் திருவருள் தவநெறி மன்றத்தின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தார். சமயச் சொற்பொழிவாளர்கள் எழுவரும் ஊர் ஊராகச் சென்று, ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். பல ஊர்களில் திருவருள் தவநெறி மன்றத்தின் கிளைகள் அமைந்தன. அவற்றில் சில இன்றும் செயல்பட்டு வருகின்றன.

இலக்கியப் பணிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆன்மிகப் பணிகளோடு இணைந்த பல்வேறு இலக்கியப் பணிகளையும் முன்னெடுத்தார். ஆன்மிகம், இலக்கியம் சார்ந்த பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியதோடு 100-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதினார். அவற்றில் சில...
இராமகாவியம் மகாபாரதம் கட்டுரைக்கனிகள் திருக்குறள் கதைகள் புராணக் கதைகள் இரு துருவங்கள் வாரியார் காட்டும் வனிதையர் பாவையர் கதைகள் தேன் விருந்து கந்தரநுபூதி உரை வாரியாரின் சிறுகதைகள் கந்தர் திருவிளையாடல் அறநெநி முருகன் கதைகள் முருகன் பெருமை காசித் திருப்புகழ் உரை பன்னிரு திருமுறைத் திரட்டு விநாயகர் மாணவருக்கு மணிமொழிகள் கேள்வி - பதில் சிவபுரணம் - உரை திருநீற்றின் தெய்வநலம் வாரியாரின் ஒருவரி பதில் அமுதமொழி திருமண வாழ்த்து இராமாயணம் - வசனம் கந்தவேள் கருணை தவம் வாரியார் வாக்கு விளக்கு அருள்வாக்கு சிந்தனைச் செல்வம் கட்டுரைச் செல்வம் திருப்புகழ்த் திரட்டு மூலம் - விரிவுரை (11 பாகங்கள்) திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் விரிவுரை திருப்புகழ், குன்றுதோறாடல் முதல் தொகுதி சிவபுராணம் - மூலம் கனவு வாழும் வழி வயலூர் திருப்புகழ் (விரிவுரை) ஆலயம் ஏன்? வாரியார் விருந்து அபிராமி பவளேந்திரி கந்தவேள் கருணை சிவனருட் செல்வர் பிள்ளையார் பெருமை கண்ணன் கனியமுதம் கற்புக் கனிகள் (9-பாகங்கள்) மகாபாரத வசனம் குழவியும், கிழவியும் தியாகம் சிந்தனைத்தேன் அறிவுரை அமுது செந்தமிழ் இன்பம் தேன் விருந்து வினா விடை திரு மயிலைத் திருப்புகழ் உரை சத்திய ஞானசபை ஸ்தூபி நீராட்டு நினைவு மலர் திருவாசகத் தேன் வடநாட்டு யாத்திரை இமாலய யாத்திரை கம்பன் கவிமணிகள் மலேயா மாட்சியும் அமர்நாத் காட்சியும் கந்தரலங்கார உரை நேபாள யாத்திரை வாரியார் விருந்து மங்கல மங்கையர் வாரியார் விரிவுரை விருந்து பெண்குலப் பெருமை வாரியார் வழங்கும் மனைவாழ்வு பைந்தமிழ்ப் பாமாலை லண்டனில் முருகன், மருதமலை முருகன் போற்றி (1008) மாதர் மணிகள் பழநி மலைப் பரமன் செஞ்சொல் உரைக்கோவை வேல், மயில், சேவல் விருத்தங்கள் விழாக்களும் விரதங்களும் வல்லக்கோட்டை திருப்புகழ் உரை வயலூர் திருப்புகழ் உரை
இதழியல் பணிகள் வாரியார், 'திருப்புகழ் அமிர்தம்' என்னும் ஆன்மிக, இலக்கியத் திங்கள் இதழை 37 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார். ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளையும், சிறுவர் கதைகளையும் எழுதினார்.
குறுந்தகடுகள்/ஒலிப்பேழைகள் கிருபானந்த வாரியாரின் உரைகளில் பல ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் வெளியாகியுள்ளன. அவற்றில் சில...
அரிச்சந்திரா அருணகிரி நாதர் ஆத்மாவின் முருக கீதம் இராமாயணம் - 8 தொகுதிகள் இராமாயண இன்பம் இரு மனைவியர் இரு வேலைக்காரிகள் இரு சகோதரர்கள் பெண்ணின் பெருமை சிறுவர்களுக்கு அறிவுரை கும்பாபிடேக மகிமை கந்தர் அநுபூதி முருகன் இசைமலர் கந்தரலங்காரம் வள்ளித் திருமணம் சந்திரகாசன் சுவாமி ஐயப்பன் திருமண வாழ்த்து கர்ணன் சீதா கல்யாணம் கந்தவேள் கருணை ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி வரலாறு இலக்கியத்தில் நகைச்சுவை திருக்குறள் கதைகள் - 1 திருக்குறள் கதைகள் - 2 சூரியன் சந்திரன் திருச்செந்தூர் வரலாறு தாயுமானவர் பிரதோஷ மகிமை திருப்புகழ்ப் பாடல்கள் (ஆறு தொகுதிகள்) திருப்புகழ் விரிவுரை திருப்புகழ் - கைத்தல நிறைகனி திருப்புகழ் - முத்தைத்தரு திருப்புகழ் - உனைத் தினம் திருப்புகழ் - அறுகநுனி திருப்புகழ் - ஐந்து பூதமும்
வழிபாடு முருகன் பெருமை செந்தமிழ் இன்பம் வாரியாரின் பூஜைப் பாடல்கள் திருப்புகழ்ப் பாடல்கள் வாரியாரின் முருகன் பாடல்கள் பட்டினத்தடிகள் நளாயணி ஒளவையாரும் தமிழும் முற்பிறவிக் கதைகள் பிரகலாதர் நாதவிந்து கலாதீ நமோ நம வாரியார் கண்ட வள்ளுவர் வாரியார் கண்ட காந்திஜி சண்முகக் கவசமும், பக்திப் பாமாலையும் நந்தனார் இராம நாடகக் கீர்த்தனை திருப்புகழ் இன்பம் மார்க்கண்டேயர் திருவகுப்பு வணக்கத்திற்குரிய முதலமைச்சர்கள் சுபத்ரா திருமணம் வள்ளலாரும் அருட்பாவும் குசேலர் விநாயகர் பெருமை மீனாட்சி திருமணம் கண்ணன் கருணை காரைக்காலம்மையார் கண்ணப்ப நாயனார் சம்பந்தர் அப்பர் சுந்தரர் வல்லக்கோட்டை முருகன் தேவார இன்பம் மகாபாரதம் 10 தொகுதிகள் மாணிக்கவாசகரும் சிவபுராணமும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மகாபாரத மகிமை கந்தபுராணத் தத்துவம் பெரிய புராண நுட்பம் கந்தபுராணம் 8 தொகுதிகள் நக்கீரன் குற்றவாளியா? (வழக்காடு மன்றம்) பாரதப் போருக்குக் காரணமானவர்கள் யார் (சுழலும் சொற்போர்) வலையப்பட்டி திருவிழாவில் குயில் இசை பெரியபுராணப் பாடல்கள் வாரியார் சுவாமிகள் வரலாறு (வில்லுப் பாட்டு)
ஒளிப்பேழைகள் (வாரியாரின் வீடியோக்கள்) வாரியாரின் உரைகள் பல ஒளிப்பேழைகளாக வெளியாகியுள்ளன. அவற்றில் சில... வணக்கத்திற்குரிய முதலமைச்சர்கள் சூரியன் சந்திரன் ஆலயம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தர் பாதுகாப் பட்டாபிஷேகம் வள்ளித் திருமணம் சீதா கல்யாணம் கந்தன் கருணை நந்தனார் வள்ளலார் பார்த்தசாரதி
வாரியார் சுவாமிகள் பெற்ற விருதுகள் முறையாக இசைப்பயிற்சி பெற்ற வாரியாருக்குச் சென்னைத் தமிழ் இசைச் சங்கம் தனது வெள்ளி விழாவின்போது, 'இசைப்பேரறிஞர்' பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 'கலைமாமணி' விருது வழங்கிச் சிறப்பித்தது. தருமபுரம் ஆதீனம் மகாசந்நிதானம் 'அமுதமொழிக் கொண்டல்' என்னும் விருதை வழங்கியதுடன் கௌரிசங்கர் உருத்திராட்சத்தையும் அளித்துக் கௌரவித்தார். பவானி திருமுறைக் கழகத்தினர் 'திருப்பணிச் சக்கரவர்த்தி', 'திருப்பணிச்சரபம்' ஆகிய இரண்டு பட்டங்களை அளித்துப் பெருமைப்படுத்தினர். வேலூர் சண்முகன் அடியார் சங்கம் 'சொற்பொழிவு வள்ளல்' என்னும் பட்டத்தைத் தந்தது. ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர், 'திருப்புகழ் ஜோதி', 'ப்ரவசன சாம்ராட்' ஆகிய பட்டங்களை அளித்து வாழ்த்தினார். காஞ்சி மஹாபெரியவர் 'சரஸ்வதி கடாக்ஷாம்ருதம்' என்ற விருதை அளித்து வாழ்த்தினார்.
பிற பட்டங்கள் 64வது நாயன்மார் - திருப்பணித் தொண்ட நாயனார் இசை நற்கலைஞர் தமிழ்ப் பேரவைச் செம்மல் அருள்மொழி அரசு ஷட்பதாநந்தா மதிப்புறு இலக்கிய முனைவர் சகலதேச சத்பிரசங்க சக்ரவர்த்தி சொற்பொழிவு வள்ளல் ஞானக் கதிரவன் அமுதப் பெருங்கடல் முத்தமிழ் வள்ளல் நூற்றாண்டு வாரி வாரி வழங்கும் வள்ளல் சொற்பொழிவுக் கடல் சொல் மாரி வாரி முத்தமிழ் ரத்தினாகரம் தரும மூர்த்தி பிரசங்கச் சக்ரவர்த்தி விரிவுரை வித்தகர் ஞான சூரியன் தவராச சிங்கம் சொல்லின் செல்வர் இறை நாவுடையார்
மறைவுதிருமுருக கிருபானந்த வாரியார் 1993ல், லண்டனில் நடைபெற்ற முருகப்பெருமான் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக லண்டன் சென்றார். அங்கு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெக்கிரேடிக் என்ற லண்டன் மருத்துவரும், கணேசரத்தினம் என்னும் தமிழ் மருத்துவரும் வாரியாருக்குச் சிகிச்சை அளித்தனர். வாரியார் விரைவில் குணமடைந்தார்.
அவர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏர்பஸ் விமானத்தில் வாரியார் இந்தியா புறப்பட்டார். காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11 மணிக்குப் புறப்பட்டது. அப்போது இந்திய நேரம் மாலை 4.30 மணி.
மருத்துவரும் உடன் வந்தார். அவ்வப்போது வாரியாரின் உடல் நிலையைக் கண்காணித்து வந்தார். ஜூலை 07, 1993, மறுநாள் காலை, மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மாறினார் வாரியார் சுவாமிகள். அது திருப்பதியைக் கடந்தபோது, அருகில் இருந்தவரிடம் வாரியார், “அடுத்தது என்ன திருத்தணிதானே?” என்று கேட்டார். அவ்வாறு கேட்ட சிறிது நேரத்திலேயே முருகன் பெயரை உச்சரித்தவாறே இயற்கை எய்தினார். வாரியாரின் உடல்நலனை உடன் பயணித்த மருத்துவர் பரிசோதித்தபோது வாரியார் காலமானது தெரியவந்தது. அப்போது வாரியாருக்கு வயது எண்பத்து ஏழு.
வாரியாரின் உடல், சென்னை, பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் அவரது சொந்த ஊரான காங்கேயநல்லூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குச் சரவணப் பொய்கையில் மேடை அமைக்கப்பட்டு சமாதி வைக்கப்பட்டது.
வாரியாரின் பக்தரும், சரவண பவன் ஓட்டல் அதிபருமான ராஜகோபால், இரண்டாயிரமாவது ஆண்டில், காங்கேயநல்லூரில், 'வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்' என்ற பெயரில் ஒரு கோவிலை அமைத்தார். அது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.
வாரியார் மறைந்தாலும் தன் ஆன்மிகக் கருத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும், நூல்களாலும், உரைகளாலும் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், என்றும் வாழ்வார்.
பெரியோர் பெருமை பேசவும் இனிதே!
திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவடிகளைப் போற்றி வணங்குவோம். ஓம். |