முனைவர் வெ. வேதாசலம்
|
 |
|
 |
கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதி இந்தியரும், டான்வில் ஏதெனியன் பள்ளி ஜூனியருமான வைஷ்ணவ் ஆனந்த் சமீபத்தில் சான் டியாகோவில் நடந்த 2025 ESRI சர்வதேசப் பயனர் மாநாட்டில் செயற்கைக்கோள் படங்களில் AI அடிப்படையிலான கடும்போலி (deepfake) கண்டறிதல் குறித்த தனது ஆராய்ச்சியை வழங்கினார். இது உலகின் மிகப்பெரிய GIS (புவியியல் தகவல் அமைப்புகள்) நிகழ்வாகும்.
வைஷ்ணவ் தேசிய 4-எச் ஜியோஸ்பேஷியல் லீடர்ஷிப் குழு உறுப்பினர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் இவர் கலிபோர்னியாவின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்த அணிக்கு ESRI, Google, UC சான் டியாகோ, NC மாநில பல்கலைக்கழகம், USDA மற்றும் NIFA (தேசிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்) ஆகியவை ஆதரவளிக்கின்றன.
வைஷ்ணவின் ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பொய்யாக மாற்றி அமைக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை (ஜியோஸ்பேஷியல் டீப்ஃபேக்) அடையாளம் கண்டறிகிறது. போலி வரைபடங்கள் மற்றும் மாற்றப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின் ஆபத்து அதிகரித்து வருவதால், அவரது திட்டம் தேசியப் பாதுகாப்பு, விவசாயத் திட்டமிடல், பேரிடர் நிவாரணம், பொதுமக்கள் சுகாதாரம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கிறது.

ESRI நிறுவனர் தலைவரும், ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தில் உலகளவில் பெயர்பெற்ற முன்னோடியுமான திரு ஜாக் டேஞ்சர்மண்ட் வைஷ்ணவின் அரங்கத்துக்கு விஜயம் செய்தது சிறப்பம்சமாகும். டேஞ்சர்மண்ட் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டியதுடன், தவறாக மாற்றியமைக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களைக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய வைஷ்ணவின் விரிவான விளக்கத்தைக் கேட்டார். இது மேப்பிங் தொழில்நுட்பத்தில் சைபர் பாதுகாப்பு மற்றும் புள்ளிவிவர மெய்மை குறித்த முக்கியமான உரையாடலாக அமைந்திருந்தது.
"டீப்ஃபேக்குகள் இனி வீடியோ அல்லது சமூக ஊடகத்தோடு நின்றுவிடப் போவதில்லை; அவை புவியியல் புள்ளி விவரங்களையும் நாசமாக்கப் போகின்றன" என்று வைஷ்ணவ் கூறினார். "இந்தத் திட்டம் செயற்கை நுண்ணறிவுடன் சைபர் பாதுகாப்பை ஒருங்கிணைத்து, தவறான செயற்கைக்கோள் படங்களைக் கண்டறிய உதவும்" என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள், புவிசார் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவை குறித்த உலகளாவிய சிந்தனைகளுக்கு விரிகுடாப் பகுதி இந்திய இளைஞர்கள் எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை வைஷ்ணவின் பணி எடுத்துக்காட்டுகிறது. |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
 |
More
முனைவர் வெ. வேதாசலம்
|
 |
|
|
|
|
|