சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது - 2025 தமிழ் விக்கி - தூரன் விருது
|
 |
சாகித்ய அகாதமி பால புரஸ்கார் விருது - 2025 |
   |
- | ஜூலை 2025 |![]() |
|
|
|
 |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க சாகித்ய அகாதமியால் வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கிருங்கை சேதுபதி, கொ.மா. கோதண்டம், யெஸ். பாலபாரதி, மு. முருகேஷ், ஜி. மீனாட்சி, உதயசங்கர், யூமா வாஸுகி ஆகியோரது வரிசையில், 2025ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படுகிறது. இவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் சரவணன், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுபுரத்தில் பிறந்தவர். ஊடகவியலில் பட்டயம் பெற்றவர். ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய மாணவர் இதழ்களின் இணையாசிரியர். 'ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி' என்கிற கவிதைத் தொகுப்பு இவரது முதல் நூல். தொடர்ந்து கவிதைகளையும், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறார் நூல்களையும் எழுதினார். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை எழுத, சொல்லப் பயிற்சி அளித்து வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.
ஜி. மீனாட்சி, சோ. தருமன், யூமா வாஸுகி ஆகியோர் அடங்கிய நடுவர் குழு, விஷ்ணுபுரம் சரவணனின் படைப்பை விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.
பால புரஸ்கார் செப்புப் பட்டயமும் ₹50000 பரிசுத் தொகையும் அடங்கியது. விருது நிகழ்வு, டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும். |
|
விஷ்ணுபுரம் சரவணனைத் தென்றல் வாழ்த்துகிறது! |
|
 |
More
சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது - 2025 தமிழ் விக்கி - தூரன் விருது
|
 |
|
|
|
|
|