|
தெரியுமா?: பத்ம விருதுகள் |
   |
- | பிப்ரவரி 2025 |![]() |
|
|
|
 |
பத்ம விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்குகிறது. 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மொத்தம் 139 பேர் பத்ம விருது பெறுகின்றனர்.
பத்மவிபூஷண் எழுத்தாளர் அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர், தெலுங்கானா மருத்துவர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி, வயலின் இசைக்கலைஞர் எல். சுப்ரமணியம், குஜராத்தைச் சேர்ந்த குமுதினி ரஜினிகாந்த் லக்கியா, கர்நாடகாவின் லக்ஷ்மிநாராயண சுப்ரமணியம், ஜப்பானைச் சேர்ந்த ஒசாமு சுசுகி (அமரர்), பீஹார் கலைஞர் அமரர் சாரதா சின்ஹா ஆகிய ஏழு பேர் இவ்வாண்டு பத்மவிபூஷண் விருது பெறுகின்றனர்
பத்மபூஷண் பத்மபூஷண் விருது 19 பேருக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் எஸ். அஜீத்குமார், நடிகையும் நாட்டியக் கலைஞருமான ஷோபனா, ஐக்கிய அமெரிக்காவின் வினோத் தாம், கர்நாடகாவின் ஏ. சூர்ய பிரகாஷ், அனந்த் நாக், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, மகாராஷ்டிர இசைக் கலைஞர் (அமரர்) பங்கஜ் உதாஸ் உள்ளிட்டோர் பத்மபூஷண் விருது பெறுகின்றனர்.
பத்மஸ்ரீ தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் குருவாயூர் துரை, சமையல் கலைஞர் கே. தாமோதரன் என்னும் தாமு, தினமலர் சென்னை இதழின் வெளியீட்டாளர் லக்ஷ்மிபதி ராமசுப்பையர், அறிவியல் மற்றும் பொறியியலாளரான எம்.டி. ஸ்ரீனிவாஸ், நாடக, தெருக்கூத்துக் கலைஞர், ஆசிரியர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், கிரிக்கெட் வீர்ர் ஆர். அஸ்வின், ஹாட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனர் ஆர்.ஜி. சந்திரமோகன், ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, பாரதியியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான சீனி விஸ்வநாதன், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஐக்கிய அமெரிக்காவின் சேதுராமன் பஞ்சநாதன், ஸ்டீஃபன் நாப், புதுச்சேரியைச் சார்ந்த இசைக்கலைஞர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட 113 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர். |
|
விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்! |
|
|
|
|
|
|
|