Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
பொது
யுவபுரஸ்கார்
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
புதுமைப்பித்தன் நாவல் போட்டி
- |மார்ச் 2022|
Share:
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து ஊக்குவித்து வருகிறது. ஆண்டுதோறும் நாவல் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான நாவல் போட்டி, 'புதுமைப்பித்தன் நாவல் போட்டி' என்னும் தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் விதிமுறைகள்
இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்பலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30,000 வார்த்தைகள் முதல் 36000 வார்த்தைகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். (சமூகம், அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், வரலாறு, யதார்த்தவாதம் அல்லது கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை)

நாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (Word Document) அனுப்ப வேண்டும். கையெழுத்துப் பிரதி மற்றும் பிடிஎஃப் (PDF) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நாவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: puthumaipithan.award@gmail.com
படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூன் 30, 2022.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும்வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும். ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும். மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ, தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் இணைத்திருக்க வேண்டும்.

இப்போட்டியின் முடிவில் மொத்தம் ஐந்து நாவல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நாவலுக்கும் தலா ரூபாய் 30 ஆயிரம் வீதம் பரிசு வழங்கப்படும். நடுவர்கள் ஐந்துக்கும் குறைவான நாவல்களையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் சேர்க்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு நாவலும் தனித்தனி நூலாக யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக பிரசுரிக்கப்படும்.
More

யுவபுரஸ்கார்
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
Share: 




© Copyright 2020 Tamilonline