செய்முறை
நெல்லிக்காயை குக்கரில் சாதம் வைக்கும் போது வைத்து, வெந்தவுடன் எடுத்து, விதைகளை நீக்கி, மிளகாய், தேங்காய், இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
பிறகு தயிரில் உப்புப் போட்டு அரைத்த விழுதை போட்டு கலக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை போடவும்.
வேகவிடாமல் பச்சை நெல்லிகாயை அரைத்தும் செய்யலாம். தேவையானால் சிவப்பு மிளகாய் தாளிக்கவும். காய்ந்த நெல்லிக்காயை நெல்லிமுள்ளி என்பார்கள். அதையும் இதே போல் வேகவிட்டுத் தேங்காய் அரைத்துக் கலந்து மிளகாய், கடுகு, பெருங்காயம் தாளித்துச் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |