| 
											
											
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - பர்வீன் சையது | செப்டம்பர் 2020 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு!
  மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு!
  வெயிலோடு விளையாடி ரொம்ப நாளாச்சு பட்டாம்பூச்சியாய் சுற்றியதெல்லாம் கனவாச்சு!
  நட்புக்கள் பூத்த இடம் மௌனத்தில் முழுகிடுச்சு மரத்தடியில் உண்ட நாட்கள் மறந்தேபோச்சு!
  ஆன்லைன் பாடமோ எட்டாக் கனியாச்சு மின்னணு உபகரணங்கள் இல்லாமல் போச்சு!
  இனணயதளமும் ஏழையோடு இணைய மறுத்திடுச்சு நாலு சுவற்றுக்குள் முடங்கி எத்தனை நாள் ஆயிடுச்சு!
  விடுமுறையே இப்ப பாரமாகிப் போயிடுச்சு பள்ளி திறக்கும் நாளுக்கு மனம்மிக ஏங்கிடுச்சு! | 
											
											
												| 
 | 
											
											
											
												பர்வீன் சையது,  ரோச்செஸ்டர் ஹில்ஸ், மிச்சிகன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |