SKCC: ஸ்ரீ மஹாபெரியவர் 26வது ஆராதனை TNF விரிகுடாப்பகுதி: நட்சத்திரக் கொண்டாட்டம் மைத்ரி நாட்யாலயா: 'நாயிகா' பெண்-USA விழா 2019 அரோரா: வறியோர்க்கு உணவு
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 94வது பிறந்தநாள் விழா | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - பத்மநாபன் | ஜனவரி 2020 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												ஸ்ரீ சத்ய சாயி பன்னாட்டு நிறுவனங்களின் 7வது பிராந்தியம், சத்ய சாய் பாபாவின் 94வது பிறந்தநாளை நவம்பர் 23 சனிக்கிழமை அன்று, வடகலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் விமரிசையாகக் கொண்டாடியது.
  சாயி ஆன்மீகக் கல்வி மாணவ மாணவிகள் "Ancient Mother" என்று தொடங்கும் அமெரிக்கப் பழங்குடியினர் பாடலை இனிதாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். தொடர்ந்து, "சத்தியம் ஒன்றே" என்ற பகவானின் அருளுரையை பஞ்சபூதங்கள் உருவான கதையைத் திரைப் பின்னணியுடன் பல்வேறு நடனங்கள் மூலம் வழங்கினர். பிறகு பஜனை நடைபெற்றது.
  தொடர்ந்து இளைஞர்கள், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்  குடும்பங்களின் செயல்பாடுகளைச் சுவையான நாடகமாக வழங்கினர். அனைவரும் கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வது எப்படி என்ற கருவில் அந்த நாடகம் அமைந்திருந்தது. அடுத்துச் சொற்பொழிவாற்றிய Dr. ரங்கா ஜெயராமன், Dr. ரமேஷ் ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி டாட்டா ஆகியோர் பகவானுடனான தமது மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். பிறந்தநாள் கேக் நறுக்கிய பின்னர், மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. 
  நிகழ்ச்சி குறித்த வீடியோவைப் பார்க்க: YouTube | 
											
											
												| 
 | 
											
											
											
												பத்மநாபன்,  சான் ஹோசே, கலிஃபோர்னியா | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  SKCC: ஸ்ரீ மஹாபெரியவர் 26வது ஆராதனை TNF விரிகுடாப்பகுதி: நட்சத்திரக் கொண்டாட்டம் மைத்ரி நாட்யாலயா: 'நாயிகா' பெண்-USA விழா 2019 அரோரா: வறியோர்க்கு உணவு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |