தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 தெரியுமா?: இசைஞானி இளையராஜாவின் அமெரிக்க நிகழ்ச்சிகள் தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளையின் கோடைக்கால மாணவர் சேவை தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே
|
 |
|
 |
இந்திய அரசின் 2018ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ விருதை 70க்கும் மேற்பட்டவர்கள் பெறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் நானம்மாள், நாட்டுப்புற இசைக் கலைஞர், டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பொறியாளர் ராஜகோபாலன் வாசுதேவன், கானுயிர் சேவகர் ரோமுலஸ் விடேகர் ஆகியோர் இதனைப் பெறுகின்றனர். கேரளப் பழங்குடியினப் பெண் லட்சுமி குட்டி, மருத்துவர் எம்.ஆர். ராஜகோபால், ஐ.ஐ.டி. கான்பூர் பேராசிரியர் அரவிந்த் குப்தா, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் முரளிகாந்த் பேட்கர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஷியாம் உள்ளிட்ட பலரும் இவ்விருதைப் பெறுகின்றனர்.
பத்மவிபூஷண் விருதை இசைஞானி இளையராஜா பெறுகிறார். மஹாராஷ்டிரத்தின் குலாம் முஸ்தஃபா கான், கேரளத்தின் பரமேஸ்வரன் ஆகியோரும் பத்மவிபூஷண் விருது பெறுகின்றனர். தமிழகத் தொல்லியல்துறை ஆய்வாளர் டாக்டர் இரா. நாகசாமி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, ஓவியர் லக்ஷ்மண் பை, இசையமைப்பாளர் அரவிந்த் பரிகா உள்ளிட்டோர் இவ்விருது பெறுகின்றனர். விருதுகள் வரும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படும்.
|
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
 |
More