பீட்ரூட் இலை கீன்வா பொங்கல்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை (நறுக்கியது) - 2 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம் தக்காளி (நறுக்கியது) -  1 கிண்ணம் வெங்காயத்தாள் (நறுக்கியது) - 1 கிண்ணம் முந்திரிப்பருப்பு - 6 தக்காளி ப்யூரி - 1/2 கிண்ணம் காராபூந்தி அல்லது ஓமப்பொடி - சிறிதளவு கீன்வா (வேகவைத்தது) - 2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு
  செய்முறை பீட்ரூட் இலை, வெங்காயம், தக்காளி இவற்றை எண்ணெய்விட்டுச் சுருள வதக்கவும். வேகவைத்த கீன்வாவைப் போடவும். உப்புச் சேர்த்து வெங்காயத் தாள் போட்டுக் கொதிக்கையில் தக்காளி ப்யூரியை விட்டுப் பச்சை வாசனை போகக் கொதிக்க வைக்கவும். உதிர் உதிராய் வந்ததும் இறக்கி முந்திரி  வறுத்துப் போட்டு சாப்பிடும்போது காராபூந்தி அல்லது ஓமப்பொடி தூவிச் சாப்பிடலாம். இது ஒரு சுவையான மாறுதலான புலாவ் ஆகும். | 
											
											
												| 
 | 
											
											
											
												தங்கம் ராமசாமி,  பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  பீட்ரூட் இலை கீன்வா பொங்கல்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |