ஹூஸ்டன் மாநகர பாரதி கலைமன்றம் 17 ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. மேற்கு ஹூஸ்டன், பியர்லேண்ட், சுகர்லேண்ட், கேட்டி, சைப்ரஸ் பகுதிகளில் 5 கிளைகள் இயங்குகின்றன. பாலர், மழலை மற்றும் 1 முதல் 8 நிலைகளில் 300 மாணவர்கள் பயில்கிறார்கள்.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் இந்தத் தமிழ்ப் பள்ளிகளுக்கு டெக்சஸ் அரசு அங்கீகாரம், உயர்தரப் தமிழ்ப் போட்டிகள், நூலகம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தத் திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதற்கான தேவைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெஸ்ட் செஸ்டர் அகடமி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. |