நாம் எத்தனை ஆங்கில வார்த்தைகளை அன்றாடம் பேசுகிறோம் என்பதையும், வீட்டில் தமிழிலேயே பேசிப்பழக வேண்டும் என்பதையும் மாணவர்கள் எடுத்துரைத்ததை பெற்றோர்கள் வரவேற்றனர். திருக்குறளும் ஜூமான்ஜி திரைப்படமும் இணைந்தால் எப்படியிருக்கும் என்பதன் அடிப்படையில் அமைந்தது 'குறள்மாஞ்சி' நாடகம். நிலை 7, 8 மாணவர்கள், தன்னம்பிக்கையே வாழ்வில் வெற்றிபெற உதவும் என்பதை 'மூல நட்சத்திரம்' என்ற தலைப்பில் நாடகமாக வழங்கினர்.
திருமதி. வித்யா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். திருமதி. சந்தியா நாராயணசாமி சிறப்பு விருந்தினரை வரவேற்றார். திருமதி. வித்யா சந்துரு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். செல்வி. ரம்யா வேலு தன்னார்வலர்களின் சிறப்புகளைக் கூறி அங்கீகார விருதுபெற அழைத்தார். தமிழ்ப் பள்ளிச் செயலாளர் திரு. ஸ்ரீராம் கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஆறாமாண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியான '5 ஐ' அறிவிக்கப்பட்டது.
சென்ற அக்டோபரில் டெக்சஸ் கல்வி மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'AdvancEd' நிறுவனம் நடத்திய அங்கீகாரத் தணிக்கையில் மாநில சராசரியைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்று முழு அங்கீகாரம் பெற்ற வடக்கு டெக்சஸின் முதல் மற்றும் ஒரே இந்தியமொழிப் பள்ளி, ப்ளேனோ தமிழ்ப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா நாராயணன், ப்ளேனோ, டெக்சஸ் |