| விஷால் கோப்லா ஆஷ்ரிதா, அக்ஸிதி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| 19 வயதில் கால்டெக்கிலிருந்து (California Instt. of Technology) பயோ எஞ்சினியரிங்கில் மூன்றே ஆண்டுகளில் ஆனர்ஸ் பட்டம் பெற்றவர் மீரா ரகுநாதன். 2012ல் அவர் உயர்நிலைப்பள்ளி முடித்தபோதே கால்டெக் மற்றும் UCSD மருத்துவப்பள்ளி இணைந்து வழங்கும் BS-MD கல்விக்கு அமெரிக்கா முழுதிலுமிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட 6 பேரில் ஒருவராக இருந்தார். தற்போது மீரா சான் டியேகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலை மருத்துவக்கல்லூரியில் பயில்கிறார். இந்த ஆண்டு கால்டெக்கின் பட்டவகுப்புக்கான அறிமுகக் கையேட்டின் முகப்பில் மீராவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 
 பெற்றோர் சுதா மற்றும் ரெகுநாதன் தென்கலிஃபோர்னியா வாசிகள். பெற்றோரின் நான்கு குழந்தைகளில் இளையவரான மீரா ரெகுநாதன் 15 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றமும் கண்டிருக்கிறார். பள்ளிக்காலத்தில் இரண்டுமுறை 'டபுள் பிரமோஷன்' பெற்றுள்ள மீரா, கால்டெக்கில் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர்களில் ஒருவராவார்.
 | 
											
												|  | 
											
											
												| 
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 விஷால் கோப்லா
 ஆஷ்ரிதா, அக்ஸிதி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |