மே 10, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை அன்னையர் தினவிழாவை மீனாட்சியம்மன் ஆலய மண்டபத்தில் கொண்டாடியது. விழாவில், ஹூஸ்டன் பகுதியில் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனம் தியாகராஜன், நளினி முகோபாத்யாயா, நலினகஷி ரங்கலா, மாலா கோபால், மலர் நாராயணன் ஆகியோருக்கு 'சிறந்த அன்னை' விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் இவ்விருதுகளை வழங்க முடிவுசெய்துள்ளதாகக் கிளையின் செயலர் ராஜ் தியாகராஜன் அறிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்டுப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஜெகனாதபுரம் ஆகியவற்றிலுள்ள அரசுப்பள்ளியில் ஹூஸ்டன் கிளை செய்துள்ள பணிகளைத் தலைவர் முனைவர் சிவராமன் தொகுத்து வழங்கினார். பெரி அழகப்பன், அபிநயா கோவிந்தன் ஆகியோரை இளைஞர்குழு ஒருங்கிணைப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார். |