மார்ச் 2026: வாசகர் கடிதம்
Mar 2026
பிப்ரவரி மாதத் தென்றல் சிறப்புப் பார்வையில் தைரோகேர் ஏ. வேலுமணி அவர்களைக் குறித்துப் படித்து மகிழ்ந்தேன். எளிய குடும்பத்தில் பிறந்து, கிடைத்த சந்தர்ப்பங்களைச் சரியாக பயன்படுத்தி அமைதியாக உயர்ந்து, பொது நலனுக்காகச் சேவை செய்கிறார் என்று அறியக் கிடைத்தது. மனைவி சுமதியின் அன்பையும் அவர் துணையோடு வாழ்க்கை எப்படி உயர்வடைந்தது என்று விவரித்திருப்பதும் மிக அருமை.
அலமாரி பகுதியில் ஆர்.எஸ். சுபலக்ஷ்மியம்மாள் அவர்களின் காசியாத்திரை கட்டுரையில், 1908ம் வருடத்தில் நடந்த விஷயங்களை விரிவாக எழுதியதைப் மேலும்...
|
|