தென்றல் பேசுகிறது...
Mar 2025
அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்று ஒரு மாதம்தான் ஆகிறது. அது ஒரு சூறாவளி மாதம் என்றால் சந்தேகமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதான எண்ணற்ற அறிவிப்புகள். USAID நிதியினால் பலனடைந்த உலகளாவிய சமூக, சமுதாய, சுற்றுச் சூழல் நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன; ஒட்டு மொத்தமாக அரசுத் துறைப் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்; மிரட்டும் அளவில் பல நாடுகளுக்கான சுங்க வரி ஏற்றப்பட்டது; இத்தனையும் போதாதென்று, பிற நாட்டுத் தலைவர்களோடு, 'ராஜ தந்திரம்' என்ற சொல்லுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் முரட்டுப் பேச்சு... என்று மேலும்...
|
|