பிப்ரவரி 2025: வாசகர் கடிதம்
Feb 2025
25 ஆண்டுகள் சவால்களையெல்லாம் சமாளித்து வெற்றிகரமாகத் தென்றல் இதழை நடத்தி, 26வது வருடத்தைத் தொடங்கியுள்ள குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் இதேபோல் வெகுசிறப்பாக வளர்ந்து, பலநூறு ஆண்டுகள் அழியாத பேரும், வற்றாத புகழுமாகச் செழித்தோங்க ஆசிகள்.
இலக்கிய இரட்டையர் சுந்தரராஜன், கிருபானந்தன் நடத்தும் 'குவிகம் இலக்கிய அமைப்பு' பற்றிய விவரம் சிறப்பாக இருந்தது. குவிகம் பெயர்க் காரணமும் வரலாறும், பணிகளும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தோம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள மேலும்...
|
|