சிக்கில் குருசரண் UC (டேவிஸ்) பல்கலையில்
பிரபல கர்நாடக சங்கீத வித்வான் சிக்கில் குருசரண் டேவிஸிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் ஃபுல்பிரைட் நிதிக்கொடையின் கீழ் கற்பிக்க வந்துள்ளார். பனிக்காலத்தின் இந்த மூன்றரை மாதங்களில் அவர் சமயக்கல்வித் துறையில் 'இந்தியாவில் சமயமும் நிகழ்கலைகளும்' என்ற தலைப்பில் பேரா. அர்ச்சனா வெங்கடேசனோடு பணியாற்றுவதோடு, பல்கலையின் பிற வகுப்புகளிலும் உரையாற்றுவார். பல்கலை வளாகத்தில் தொடராகத் தென்னிந்திய இசை குறித்த பணிப்பட்டறைகளும் செயல்முறை வகுப்புகளும் தொடர்ந்து நடத்துவார். தவிர, ஃபிப்ரவரி 25, 2015 அன்று மாலை 7:00 மணிக்கு வாண்டர்ஹெஃப் சிற்றரங்கில் ஹிந்துஸ்தானி பாடகர் ரீடா சஹாய் அவர்களோடு இசைக்கச்சேரி செய்வார்.

இந்தப் பணிக்காலத்தில் அவரது சேவையைப் பிற பல்கலைக்கழகங்களும் இசைப்பள்ளிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம். வேண்டுவோர் அர்ச்சனா வெங்கடேசனை avenkatesan@ucdavis.edu என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

"கால வரம்பற்ற நமது கலையை உலகின் பிற இசைவடிவங்களுக்கிடையே வைப்பதில் என் பங்கைச் செய்ய இந்தப் பணி என்னை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்கிறது. இதன்மூலம் நான் எது தனித்துக்காட்டுகிறது என்பதை அறிந்து, இறுதியில் நாம் இணையும் வழியைக் காட்டும்" என்கிறார் சிக்கில் குருசரண். இவருடனான தென்றல் நேர்காணல் வாசிக்க

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com