நந்தலாலா இயக்கம்
"ஒரு குழந்தை நாளை எப்படி வருவான் என்று நாம் கவலைப்படுகிறோம். ஆனால் அது இன்றே ஒரு தனிநபர் என்பதை மறந்து விடுகிறோம்."

ஒரு குழந்தைக்குத் தற்போதுள்ள ஆர்வம், ஆற்றல் இவற்றில் உள்ள நம்பிக்கை இவைகளை அறிந்து, அந்தக் குழந்தையின் இயல்பான சக்தியைப் பேணி வளர்க்கச் சொல்கிறது நந்தலாலா இயக்கம். 1988-ம் வருடம் சென்னையில் ந்¢றுவப்பட்டது. தற்போது இந்தியாவில் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த இலாப நோக்கற்ற நிறுவனம் இன்று உலகெங்கும் விரிந்து இதன் கிளைகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நியூஜெர்ஸியிலும் மத்திய கிழக்கில் துபாயிலும் உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள நந்தலாலா நிறுவனத் தொண்டர்களின் கல்வி, சுகாதாரம் குறித்த சேவை சுமார் 10000 பள்ளிக் குழந்தைகளைச் சென்றடைகிறது. இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வசதியற்ற, வசிப்பிடமில்லாத தொலைதூர கிராமங் களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்கின்றனர்.

மதியொளி ஆர். சரஸ்வதி அவர்கள் ஒரு திறமைமிக்க எழுத்தாளர். மனிதவர்க்கத் திற்கு உழைப்பதில் சோர்வு கொள்ளாதவர். இந்த நிறுவனத்திற்கு இவர்தான் பெரிய உந்துசக்தி. குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்தபின்பு இருப்பதற்காக மையம் ஒன்றைத் துவக்கினார். இதில் புராணக் கதைகள், கணிதம், கையினால் வர்ணம் தீட்டுதல், கைவினைப்பொருட்கள் செய்வது போன்ற பல தரப்பட்ட வகுப்புகளை நடத்தி, பிஞ்சு மனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற இந்த கருத்தே இந்த நிறுவனத்திற்கு வித்திட்டது. சில வருடங்களுக்குப் பிறகு இவர் நந்தலாலா சேவா சமிதி என்ற சமூகப் பண்பாட்டு அமைப்பை மானுட சேவைக்காக ஆரம்பித்தார்.

ஆன்மீக, கலாசார, கல்வி, சமுதாய, உடல் நலத் திட்டங்கள் மூலமாக குழந்தைகளுக்கு மனதில் படியவைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் இந்த அணுகுமுறை, அதாவது குழந்தைகளிடம் நந்தலாலா காட்டும் ஈடு இணையற்ற கவனிப்பே அதன் தனிச்சிறப்பு ஆகும்.

நந்தலாலா குழந்தைகள் சனிக்கிழமை மதியம் பகல் உணவைச் சமைத்து சான் ஹோஸேயில் உள்ள வீடற்றோர் வசிப் பிடத்தில் (homeless shelter) பரிமாறுவதைப் பார்க்கலாம்; வேத பாடத்தின் ஒரு பகுதியாக மந்திரங்களைக் கூறுவதைக் கேட்கலாம்; இளைஞர் கச்சேரிகள் மூலம் சங்கீதத் திறமையை வெளிப்படுத்துவதை ரசிக்கலாம். அர்ச்சகர் அல்லது பெரியவரின் உதவி இல்லாமல் சென்னையில் உள்ள நந்தலாலா கோயிலில் உள்ள பகவான் கிருஷ்ணருக்கு மலர் அர்ப்பணித்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நந்தலாலா நிறுவனம், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்கள் தாங்களாகவே வெளிப்படுவதற்கும் வகை செய்கிறார்கள். அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்துகிறார்கள்.

ஜூன் 2004ல் பெங்களூரில் க்ஷண க்ஷணா (Kshana Kshana) என்ற குழந்தைகளின் கல்வி மற்றும் கலாசார மையம் தொடங்கப் பட்டது. இன்று அந்த மையம் மாநகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள நலிந்த குடும்பத்தினர் குழந்தைகளுக்கு கணினிப் பயிற்சி அளிப்பதுடன், இசை, நடனம் மற்றும் பிற பாடங்களைக் கற்பிக்கிறது.

இந்தியாவின் கீழ்மட்ட சமூகத்தின் உடல்நலப் பாதுகாப்பிலும் கல்வியிலும் நந்தலாலா இயக்கம் காட்டும் அக்கறையை அங்கீகரிக்கும் வகையில் ஜூலை 2004-ல் பார்சிலோனாவில் நடந்த உலக சமயப் பாராளுமன்றத்தில் பேசுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சுனாமி பாதித்தபோது கல்பாக்கம், கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நந்தலாலா அமைப்பினர் இந்திய அமெரிக்க மருத்துவர்கள் குழாத்தின் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தியதுடன் மீன் பிடிக்கும் வலைகளையும் வினியோகித்தனர். மேலும் குடியிருக்க வீட்டு வசதி ஏற்படுத்தியதோடு சமைத்த சூடான மதிய உணவை ஐயாயிரம் கிராம மக்களுக்கு மூன்று நாட்கள் அளித்தனர்.

மதியொளி ஆர். சரஸ்வதி அவர்களின் அமெரிக்க வருகையை ஒட்டி நந்தலாலா நிறுவனம் கிழே கண்ட இரு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

முதல் நிகழ்ச்சி:

நந்தலாலா இளைஞர் இசைக் கச்சேரி (Youth Concert)
நாள்: செப்டம்பர் 9, 2005 (வெள்ளிக்கிழமை)
நேரம்: 7:30-9:30 PM
இடம்: Mission City Center of Performing Arts
(Wilcox High School Campus)
3250 Monroe St,
Santa Clara, CA 95051
நுழைவுச் சீட்டு:
14 வயதிற்குக் கீழ்ப்பட்டோருக்கு - $10
மற்றவர்களுக்கு - $20

இரண்டாவது நிகழ்ச்சி:

ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்குக் கூட்டுப் பிரார்த்தனை
நாள்: செப்டம்பர் 17, 2005 (சனிக்கிழமை)
நேரம்: 10:30 AM-1:00 PM
இடம்: Mission City Center for Perfoming Arts
(முகவரி மேலே தரப்பட்டுள்ளது)

பக்தர்கள் காலை 10:30 மணிக்கு இருக்கையில் இருக்கவேண்டும். ஸ்ரீ லக்ஷ்மி பூஜை சரியாக 11:00 மணிக்குத் துவங்கும். மதியம் 1:00-3:00 மணிவரை பிரசாதம் வழங்கப்படும்.
வாகனங்களை நிறுத்த நிறைய இட வசதி உள்ளது.
சுட்டப்படும் நன்கொடை: $101
இரண்டு நிகழ்ச்சிகளுக்கும்

அனுமதிச் சீட்டுகளுக்கு:

காயத்ரி சுந்தரேசன்:
408.720.8437

வைஷ்ணவி ராமகிருஷ்ணன்:
925.462.3508

இவற்றிலிருந்து பெறப்படும் வருமானம் அனைத்தும் நந்தலாலா நிறுவனத்தின் புதிய முயற்சியான குறைந்த செலவில் சிறுநீரக டயாலிஸிஸ் (Dialysis) மையமொன்றைச் சென்னையில் அமைத்துப் பராமரிப்பதற்கு உபயோகிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.nandalala.com
மின்னஞ்சல்: nandalalam@yahoo.com
தொலைபேசி: 408.720.8437

தமிழில்:சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com