செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர்.
  செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது.
  யாகாவா ராயினும் செல்காக்க காவாக்கால் சோகாப்பர் செல்லிழக்கப் பட்டு.
  செல்லை மறப்பது நன்றன்று, கொடுமையாம் இல்லை சார்ஜர் எனல்.
  வாங்கும் பொழுதின் பெரிதுவக்கும் செல்ஃபோனில் காதலி குரல்கேட்குங் கால்.
  இனிய செல்லிருக்க ஈமெயில் தேடல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
  யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் செல்லோடு செல்லாத வாறு.
  கொள்ளுக செல்லைப் பிறிதோர்செல் அச்செல்லை வெல்லும்செல் இன்மை அறிந்து.
  எல்லா செல்லும் செல்லல்ல மைந்தர்க்கு நல்லா ஐஃபோனே செல்.
  டெக்ஸ்டென்பர் எம்.எம். எஸ்ஸென்பர் தம்செல்லின் ஒலியினிமை கேளா தவர்.
  தங்கம் ராமசாமி,  பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி. |