| பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலாவின்  மகன் சுசீந்திரா கதாநாயகனாக நடிக்க 'ஸ்வீட்' என்ற பெயரில் படம் ஒன்றை ஸ்ரீலெட்சுமி விஸ்வநாதன் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
 வஞ்சிக்கோட்டை வாலிபன், தேனிலவு உள்பட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களில் நாயகியாக நடித்த வைஜயந்திமாலா அன்றைய ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று விளங்குகிறார்.
 
 சத்யராஜ், அஜீத் இருவரும் இணைந்து நடித்த 'பகைவன்' படத்தில் பணியாற்றிய விஸ்வாஸ் சுந்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஸ்வீட்' படத்தில் சுசீந்திரா நாயகனாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
 
 சுசீந்திராவிற்கு இப்படத்தில் ஜோடியாக  மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி நடிக்கவிருக்கிறார். இசையை யுவன் சங்கர்ராஜா கவனிக்கிறார். படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கிறது.
 
 கேடிஸ்ரீ
 |