| தேவையான பொருட்கள் 
 1 1/2"துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காய்	-	2 கிண்ணம்
 உப்பு				-	தேவையான  அளவு
 மிளகு பொடி			-	1 டீஸ்பூன் (அவரவர் ருசிக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உபயோகித்துக் கொள்ளலாம்)
 ஆலிவ் ஆயில்			-	1/4 கிண்ணம்
 
 செய்முறை
 
 ஓவனை 400 டிகிரி ·பாரன்ஹீட்டிற்கு சூடு படுத்தவும். கத்தரிக்காய், உப்பு, மிளகு பொடி இவற்றைக் கலந்து ஒரு பேகிங் ஷீட்டில் பரத்தவும். அதன் மேல் ஆலிவ் ஆயிலை நன்றாகத் தெளிக்கவும். ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும். பின்னர் வெளியில் எடுத்து உடன் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |