| தேவையான பொருட்கள் 
 இந்தியன் கத்தரிக்காய் 		-	3
 புதியதாக துறுவிய தேங்காய் துறுவல்	- 	2 டீஸ்பூன்
 பொடியாக  நறுக்கிய வெங்காயம்	- 	1/4 கிண்ணம்
 தக்காளி பொடியாக நறுக்கியது	- 	1/4 கிண்ணம்
 புளி இன்ஸ்டண்ட்		- 	1/4 டீஸ்பூன்
 சமையல் எண்ணெய்		- 	1 டேபிள் ஸ்பூன்
 உளுத்தம்பருப்பு		- 	1 டேபிள் ஸ்பூன்
 சிவப்பு மிளகாய்		- 	3
 பெருங்காயம்		- 	1/8 டீஸ்பூன்
 கறிவேப்பிலை		- 	கொஞ்சம் தாளிப்பதற்கு
 கடுகு			- 	1/2 டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு 		- 	1 டீஸ்பூன்
 
 செய்முறை
 
 கத்தரிக்காயை காஸ் அடுப்பில் நன்றாகப் படும்படி வைத்து சுடவும். எல்லா பக்கமும் அடுப்பின் தீ படும்படி மாற்றி மாற்றி வைக்கவேண்டும். கத்தரிக்காய் நன்றாக சுருங்கி தோல் கறுத்துவிடும்.
 
 இதை நன்றாக ஆறவிட்டு பின்னர் தோலை நீக்கவேண்டும். அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், போட்டு வறுத்து, துறுவிய தேங்காய் துறுவலையும் போட்டுப் பிரட்டி இத்துடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கி ஆறவிடவும். மேலே வதக்கிய கலவையுடன், புளி, உப்பு, சுட்டு உரித்த கத்தரிக்காயையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி கலக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |