| தேவையான பொருட்கள் 
 கத்தரிக்காய் 	- 2 கிண்ணம் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
 தக்காளி		- 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
 வெங்காயம்		- 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
 சமையல் எண்ணெய்	- 2 டேபிள் ஸ்பூன்
 இஞ்சி		- 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 பூண்டு		- 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 கறிவேப்பிலை	- கொஞ்சம்
 தேங்காய் பால்	- 1 கிண்ணம்
 புளி தண்ணீர்	- 1 டேபிள் ஸ்பூன்
 சோம்பு		- 1/2 டீஸ்பூன்
 உப்பு		- தேவையான அளவு
 
 செய்முறை
 
 அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,சீரகம்  போட்டு வறுபட்டதும், வெங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள். பின் கத்தரிக்காய் போட்டு நன்றாக வதக்கி வேகவிடுங்கள்.
 
 தக்காளி துண்டங்களைப் போட்டு வதங்கியபின்பு கரம் மசாலா பவுடர், மஞ்சள் பொடி, சிவப்பு மிளகாய் பொடி, தனியா பவுடர் எல்லாவற்றையும் போட்டு பொடி வாசனை போக வதக்குங்கள். இதில் புளித் தண்ணீரை விட்டு, (மிகக் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விடவும்). ஒரு தட்டை கொஞ்சம் இடைவெளி விட்டு வாணலியை மூடி அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக வேகவிடுங்கள். ஒன்று சேர வந்தபின்பு தேங்காய் பால் விட்டுக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி கறிவேப்பிலையைத் தாளித்துக் கொட்டுங்கள்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |