வாசகர் கடிதம்: அனைத்து அம்சங்களும் கொண்ட சிறப்பான இதழ்
அக்டோபர் மாதத் தென்றல் படித்து மகிழ்ந்தேன். ஹனுமான் அன்ஸ் - திரைப்படம் வந்த சமயத்தில் 'நீம் கரோலி பாபா' பற்றிய கட்டுரை வெளியிட்டது மிகவும் சிறப்பு. அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறோம்.

'திருமணங்கள் விமானத்திலும் நிச்சயிக்கப் படலாம்' சிறுகதை ஜென்-z தலைமுறைக்கு ஒத்த கதைதான். விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பற்றிய தகவல்கள் அருமை. தமிழ்ப் பள்ளிகளில் நாட்டுப்புற நடனம் என்றாலே இவருடைய பாடல்கள்தான் மிளிரும். அனைத்து அம்சங்களும் கொண்ட சிறப்பான இதழ்!

வித்யாலக்ஷ்மி டி,
டாலஸ், டெக்சஸ்.

© TamilOnline.com