ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி: தமிழ்ப் பாடலாசிரியர் தினம்
டிசம்பர் 20, 2025 அன்று, ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி அமெரிக்காவில் தமிழ்ப் பாடலாசிரியர் விழாவை கோலாகலமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி ஃப்ளெமிங்டன் (நியூ ஜெர்சி) திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபத்தில் நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேலான குழந்தைகள் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்து பங்கேற்று, தமிழ்ப் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். விழாவுக்கு ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபத்தின் தலைவர் திரு. சூரி சுப்ரமணியன் தலைமை தாங்கி சிறப்பித்தனர்.



நிறைவாக, விழாவை ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி இயக்குனர்கள் திருமதி நிர்மலா ராஜேஷ் மற்றும் திரு ராஜேஷ் நாதன் இணைந்து மங்களம் பாடி இனிதே முடித்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஆன்லைனில் காண: sruthiswara.com | YouTube | FaceBook | Instagram

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com