குழந்தையின் அழைப்பு
கிருஷ்ணர் பிறந்து சில வாரங்களே ஆகி இருந்தபோது, ஒரு துறவி நந்தகோபரின் வீட்டிற்கு வந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இது எந்தப் புத்தகத்திலும் காணப்படாத சம்பவம். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

துறவியின் நாகரிகமற்ற உருவத்தைப் பார்த்தால் குழந்தை அழத் தொடங்குமோ என்று அஞ்சி, பணிப்பெண்கள் உள்ளே ஓடினர். இருப்பினும் முனிவர் உள்ளே சென்றார். அவரை வெளியே அனுப்பினால் குழந்தை அழுததே அன்றி, அவர் அணுகியபோது அல்ல என்பதை யசோதை கவனித்தாள்.

கிருஷ்ண பரமாத்மாவைப் பார்க்க வந்ததாக முனிவர் கூறினார். அந்தப் பெயர் குடும்பத்தில் அனைவருக்கும் புதிதாக இருந்தது. அந்த விசேஷமான விருந்தினரைப் போகச் சொன்னபோது குழந்தை அழுததில் ஆச்சரியமில்லை!

தேவகிக்குக் கிருஷ்ணர் கடவுளாக தரிசனம் வழங்கினார். ஆனால் இந்த முனிவரோ இறையருளால் அவதாரத்தின் வருகையை அறிந்திருந்தார். முனிவரை தரிசனத்திற்கு அழைத்ததே குழந்தைதான்.

நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2025

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com