சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்மபூஷண் டாக்டர் S.S. பத்ரிநாத் அவர்களின் கிராம மக்களுக்கு இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சை எனும் கனவை நனவாக்கும் வகையில், சங்கர நேத்ராலயாவின் நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவின் கிராமத்தைத் தத்தெடுத்தல் திட்டத்தின் கீழ், அரிசோனாவின் ஃபீனிக்ஸ் இளைஞர்கள் குழு வழங்கிய நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி $145K நிதியைத் திரட்டியது.
நவம்பர் 2, 2025 அன்று மேசா கலை மையத்தில், வர்ஜீனியா ஜி. பைபர் ரெபர்ட்டரி தியேட்டரில் (1E மெயின் ஸ்ட்ரீட், மேசா, AZ 85201) இளைஞர்கள் வழங்கிய நடைபெற்றது. 'Dance for Vision' என்ற பிற்பகல் நிகழ்ச்சியில் பாரதத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மரபுகளைச் சேர்ந்த சுமார் 160 இளம் கலைஞர்கள் பங்கேற்றனர். அனைத்து அகாடமி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மிகச்சிறப்பாகக் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
நன்கொடையாளர்கள் சுஜாதா குன்னாலா, சூரி குன்னாலா, டாக்டர் ரூபேஷ் கந்தலா, மாதவி ரெட்டி, ஆதி மோர்ரெடி, ரேகா ரெட்டி, ஷைனிங் ஸ்ப்ரூட்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜய் ராஜ், தங்கரத்தினம், தமியா தேவி, ரேவதி, ஜெகதீஷ் பாபு ஜோனடா, சிரிஷா, டாக்டர் அருண் கொல்லி ஆகியோர் சங்கர நேத்ராலயாவின் பணியில் தாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப் படுவதாக தெரிவித்தனர். நன்கொடையாளர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்திய துணைத் தூதரகம் (லாஸ் ஏஞ்சலஸ்) ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தியில், பாரதத்தின் கண் ஆரோக்கியத்தை விரிவுபடுத்தத் தோள் கொடுக்கும் அரிசோனா குழுவிற்கு நன்றி தெரிவித்தது.
நகைச்சுவை நடிகர் ராம்குமார் 'Laughs for Vision' என்ற கருத்தில் தனது 25வது நிகழ்ச்சியை நடத்திக் கூட்டத்தினரை மகிழ்வித்தார்.
ஸ்ரீசக்ரா இசைப்பள்ளி, ருத்ரம் நடனப்பள்ளி, ராம நிஷ்தலா மற்றும் குழந்தைகள், LetsDanceAZ பள்ளி, தேசி நடன உடற்பயிற்சி, நடன ஆன்மாக்கள், ABCD நடனப்பள்ளி, MK நடன அகாடமி, நாட்டியாம்ருதா மற்றும் சங்கேர்த்தமுருதா கலைகள், பாலிவுட்–டோலிவுட் ஃப்யூஷன் நடனம், தேசி நடன உடற்பயிற்சிப் பள்ளி, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் பாரதியார் பாடல்கள் என உற்சாகமான நிகழ்ச்சிகளை வழங்கினர்.

Mobile Eye Surgical Unit-ன் தாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சங்கர நேத்ராலயா செயலாளர் வம்சி கிருஷ்ணா ஏறுவாரம், ஆதி மோர்ரெடி (அறங்காவலர்கள் குழு), ஸ்ரீனி குப்தா (அரிசோனா CVP), டாக்டர் ரூபாஷ் ரெட்டி (MESU CapEx குழு), ஸ்ரீஜித் ஸ்ரீனிவாசன் (பப்ளிசிட்டி) மற்றும் அனில்தியா ரத்வாஜ் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். அரிசோனா பிரிவின் நடராஜன் தெய்வசிகாமணி, சென்னையா மதூரி, சதீஷ் பஞ்சாக்ஷரம், அஞ்சி ரெட்டி சீலம், விஜய் ராஜ், தாமோதரன் ராமலிங்கம், ஸ்ரீதர் செமித்தி மற்றும் பாலாஜி வல்லபரபு நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்து முகாம் அறிவிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அரிசோனா பீனிக்ஸ் பாடகர்கள்: சாய் பிரசாத், உஷா சாய்பிரசாத், ஆர்யமான், அர்பனா அஜித், ஷ்ரியா செந்தில், ராதிகா மோகன், பார்தி சந்திரசேகரன், அஷ்வின் ராம் பம்மி, கீர்த்தி, ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த், மற்றும் ஸ்ரீகாந்த் விகே ஆகியோரின் குரல்கள் கொண்டாட்டத்தைக் கோலாகலம் ஆக்கின.
ராஜேஷ் துலிபல்லா, பிரனீத் பிரசாத், அருண்குமார் செல்வராஜ், பாஸ்கரன் மண்ணுசாமி, பூமா கிருஷ்ணசாமி, சித்ரா பிரியா, மஹித், ஸ்ரீனிவாஸ் ஜே., கோகுல், தீரஜ் போலா, சுதர்சன் ரெட்டி மச்சுபள்ளி, சுபாஷ் மற்றும் ஜெயபிரகாஷ் ரத்தினவேலு உள்ளிட்ட தன்னார்வத் தொண்டர்கள் பின்னணியில் உதவினர்.
நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவதற்காக வழிகாட்டிய சங்கர நேத்ராலயா அமைப்பின் தலைவர் பால இந்துர்த்தி மற்றும் பொருளாளர் மூர்த்தி ரேகபள்ளி, காசி அருணாச்சலம், தியாகராஜன் ஆகியோருக்கு நன்றி. நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு: www.sankaranethralayusa.org
முனைவர் அ.போ. இருங்கோவேள், சங்கர நேத்ராலயா, சென்னை, இந்தியா |