உ.சி.யின் படைப்பும் பதிப்பும்: பன்னாட்டுக் கருத்தரங்கம் & நூல் வெளியிடுதல்
வ.உ. சிதம்பரனார் சுதந்திரப் போராட்ட வீரர், காலனியாதிக்க காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்தை முன்னிறுத்த சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் மட்டும் அல்ல. மிகச்சிறந்த படைப்பாளி, பதிப்பாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

வ.உ.சி.யின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘வ.உ.சி. யின் படைப்பும் பதிப்பும்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் & நூல் வெளியீடு (International Conference on V. O. C’s Writings and Editorial Works) நடைபெற உள்ளன.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டை பிப்ரவரி 06, 2026 நாளன்று நாகம்பட்டி ம.சு.ப. கல்லூரியில் நடத்த உள்ளனர்.

இதற்கு இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டுரை வழங்கலாம்.

கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

முன்பதிவுப் படிவம்:
forms.gle/RJD5aR4tLo68KrpA7

கட்டுரை அனுப்ப நிறைவு நாள்: 31.12.2025

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com