சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்மபூஷண் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையில் உருவான நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவின் சேவை, அமெரிக்க வாழ் கொடையாளிகளின் பங்களிப்பில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது. அனைவர்க்கும் பன்னாட்டுத் தரத்தில் சிகிச்சையை, அதிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, சாலை வசதியற்ற கிராமப்புறங்கள் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று அங்கேயே ஆபரேஷன் உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சங்கர நேத்ராலயா USA அமைப்பின் முயற்சியால் நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவின் சேவையை வழங்குவதற்காக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தங்கள் பூர்வீக கிராமங்களைத் தத்தெடுத்து அங்கே இலவச கண் மருத்துவ சேவையை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
பத்மபூஷண் டாக்டர் ஜகதீஷ் ஷேத், அமெரிக்காவில் இலக்கியம் மற்றும் கல்வித் துறைகளில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்து வருகிறார். இவர், எமரி பல்கலைக்கழகத்தின் கோயிசுவேட்டா வணிகப் பள்ளியில் சந்தைப்படுத்தல் பேராசிரியராக உள்ளார். இவர் 2020ல், இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புகளுக்காக, இந்திய அரசின் பத்மபூஷண் விருதைப் பெற்றார். டாக்டர் ஜகதீஷ் மற்றும் அவரது மனைவி திருமதி மது ஜகதீஷ் குடும்பத்தார், காஞ்சிபுரம் வேலூர் சாலையில் உள்ள ஒலி முஹமத்பேட்டை கிராமத்தை தத்தெடுத்தல் (Adopt a Village in India) மூலம் தத்தெடுத்தனர். இங்கு ஆகஸ்ட் 30, 2025 முதல் ஆகஸ்ட் 7 ,2025 வரையிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன.

முகாமில் கண் பரிசோதனை 546 பேருக்கு நடைபெற்றது. இவர்களின் 100 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டது. முகாம் வளாகத்திலேயே 53 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து, கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தியதும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. மேலும் சில கண் சார்ந்த பிரச்சினைகளும் இருந்த 119 பேரை சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவின் கட்டணமில்லா சிகிச்சைப் பிரிவான ஜஸ்லோக் சமூக கண் மைய மருத்துவமனைக்கு மேற்கொண்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கே சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கும் நன்கொடை அளிக்கவும்: www.sankaranethralayausa.org கட்டணமில்லாத் தொலைபேசி: (855) 463-8472
வரிவிலக்குத் தரும் நன்கொடைகளை அனுப்ப முகவரி: Sankara Nethralaya USA, 77238 Muncaster Mill Rd, No 522, Derwood, MD 20855
செய்திக்குறிப்பிலிருந்து |